பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

898-திருவாசகம் சில சிந்தனைகள் 5 வேண்டுமேயானால் இரண்டு சூழ்நிலைகள் இருத்தல் வேண்டும். ஒன்று- ஈடுபடுவதால் கிட்டும் உடனடிப் பயன்; இரண்டு- இந்த உடனடிப்பயனை முன்னர்ப் பெற்றவர்களின் உதாரணத்தை எடுத்துக்காட்டுதல். இந்த இரண்டும் இருந்தால் உயிர்கள் இதில் ஈடுபடுவது உறுதி. உடனடிப்பயன் கிட்டும் என்பதைத் தினைத்தனை உள்ளதோர் (217) என்று தொடங்கும் பாடலில் விரிவாகப் பேசுகிறார். ஒவ்வொரு பூவிலும் சென்று, சொட்டுச் சொட்டாகத் தேனை எடுத்து அல்லல் படும் வண்டைப் பார்த்து, தேன் சொரியும் குனிப்புடையான்’ என்று குறிப்பிடுவதால் வண்டுக்குக் கிடைக்கும் உடனடிப்பயன் அளவிடற்கரியது என்பதைக் கூறினாராயிற்று. தேன் சொரியும் குனிப்புடையானிடம் போவது என்று முடிவு செய்துகொண்ட வண்டு, அவனை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்று தனக்குள் சிந்திக்கலாயிற்று. 'தோலும் துகிலும் (232) என்று தொடங்கும் பாடலில் மிக விரிவாக அதற்கு விடை கூறுகிறார். உடனடிப்பயன்பற்றி இந்த இரண்டு பாடல்களில் கூறிவிட்ட அடிகளார், ஏதேனும் முன் உதாரணம் காட்டினால் வண்டின் மனத்தில் திடம் உண்டாகும் எனக் கருதுகிறார். எனவே, தூது அனுப்பும் முறையில் அமைந்த 227, 233 என்ற இரண்டு பாடல்கள் தவிர எஞ்சிய 18 பாடல்களில் தம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்த செய்திகளைக் கூறுகிறார். ‘நாயிற் கடையாய்க் கிடந்த தம்முடைய பிழைகளையெல்லாம் தான் பொறுத்து (226), சித்த விகாரக் கலக்கம் தெளிவித்தான் (220) என்று கூறுகிறார். அத்தோடு நில்லாமல், மாலும் அயனும் ஏமாறி நிற்க (234 அடியேன் இறுமாக்கச் செய்தான் என்றும் கூறுகிறார். தனிப்பட்ட உயிர் ஒன்றுக்கு இவ்வளவு செய்தவன் உறுதியாகத் தனக்கும் அருள்செய்வான் என்ற மன்த் திட்பம் வண்டிற்கும் உண்டாகிறது.