பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை 0-399 உலகியலில் ஒரு நிகழ்ச்சியை இன்றும் காணலாம். வெளிநாடு சென்றுவந்த அனுபவமுடையவர்கள் தம்முடைய புத்திமதியைக் கேட்டுவரும் புதிதாக வெளிநாடு செல்வோர்க்கு அந்த யாத்திரையின் நெளிவு சுழிவுகளை விவரமாக எடுத்துக்கூறுவர். ஒரு வகையாகப் புதியவர் வெளிநாடு செல்லப் புறப்படுகையில் நீ போனவுடன் இன்ன இடத்திலுள்ள என் நண்பரிடம் தயைகூர்ந்து இதைக் கொடுத்துவிடுக' என்று ஒரு மூட்டையை அவரிடம் தருதலைக் காணலாம். அதேபோலச் செல்ல வேண்டிய இடம், சென்றால் கிடைக்கும் பயன் ஆகியவற்றைப் பதினெட்டுப் பாடல்களில் கூறிய அடிகளார் வண்டைப் பார்த்து ‘ஏ வண்டே! நீயோ போவதற்கு உறுதியாக முடிவு செய்துவிட்டாய். அப்படிச் சென்று அவனைக் காண்பாயேயானால் எனக்காக ஒரு சின்ன உபகாரம் செய்ய வேண்டும். பெரிதாக ஒன்றும் ய்ெயவேண்டியதில்லை. என் துயரத்தை அவனிடம் சென்று சொல்வது ஒன்றுதான் நீ எனக்குச் செய்யவேண்டிய உபகாரம். சாலப் பெரியவன், எனவே என்னுடைய முறையீடுகளை உன்னுடைய உச்ச ஸ்தாயி ரீங்காரமூலம் அவனுடைய காதுகளிடம் சென்று சொல்லிவிடாதே. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?'என்று கேட்கிறாயா? இதோ சொல்கிறேன். என் உள்ளத்தில் தோன்றிய துயரங்களையெல்லாம் போக்க அவன் இன்னும் வரவில்லை என்ற செய்தியை அவனுடைய திருவடியில் சொல்வாயாக. அப்படி கூறும்பொழுதேகூட உன்னுடைய உச்ச ஸ்தாயியில் இல்லாமல், மிக மென்மையான குரலில் (குளிர்ந்து) ஊதுவாயாக’ என்ற பொருளில் உள்ளத்து உறுதுயர் ஒன்று ஒழியா வண்ணமெல்லாம் தெள்ளுங் கழலுக்கே (233) குளிர்ந்து ஊதாய் (22) என்று பாடுகிறார். சிற்றுயிர்களை நோக்கிப் பாடிய இரண்டு பதிகங்களுள் முதலாவதாக உள்ள திருக்கோத்தும்பியைப்பற்றி இவ்வளவு