பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவாசகம் சில சிந்தனைகள்-5 நடித்தல், செய்தல் ஆகிய இரண்டுமே அடிப்படையில் உண்மையில்லாமல் பிற மன்னர்களுக்காகவும் மக்களுக்கா. வும் செய்யப்படுகின்றன என்பதை அறிதல் வேண்டும். மேலே கூறப்பெற்ற நடித்தல், செய்தல் ஆகிய இரண்டும் உண்மைக்கு மாறானவை என்று தெரிந்திருந்தும் அரசியல் சூழல் காரணமாகச் செய்யப்படுபவையாகும். இந்த இரண்டிலும் ஈடுபடும் தேர்ந்த ஆட்சியாளர்கள் இந்த நடிப்பில் ஆழ்ந்துபோகாமல், தாம் யார் என்பதை மறவாமல், மனத்தில் பதித்திருத்தல் வேண்டும். ஓயாமல் நடிப்பதும் பொய் செய்தலும் நடைபெறுகின்ற காரணத்தால், இதற்குக் கர்த்தாவாக இருக்கின்ற அரசியல் வாதிகள் நாளாவட்டத்தில் தம்முடைய உண்மைத் தன்மையை மறந்து நடிகர்களாகவே ஆகிவிடுவர். ஆனால், தேர்ந்த அரசியல் அறிஞன் எவ்வளவு நடித்தாலும், தான் fr என்பதை மறப்பதேயில்லை. அதனைத்தான்־חu_I அடிகளார் நான் எனது எனும் மாயம் கடித்த வாயிலே நின்று’ என்று பேசுகிறார். அதாவது இந்த அகங்கார மமகாரங்கள் அவர்களைக் காக்கின்ற கேடயமாக அமைந்துவிடுதலைக் காண்கிறோம். அடிகளார் வாழ்க்கையில் உண்மையான சிக்கல் நிகழ்ந்த நேரமிது. குருநாதரைக் காண்கின்றவரையில் முழுநேர அரசியல் அலுவலரான அவர் நடித்துக் கொண்டிருந்தார். பொய்களைச் செய்துகொண்டிருந்தார். எந்த நிலையிலும் தம்மை இழக்காமல் இருக்க நான், எனது என்ற அகங்கார மமகாரங்கள் அவரைப் பற்றிக்கொண்டு நின்றன. திருப்பெருந்துறைக் குருநாதரைக் காண்கின்றதற்கு முந்தைய நிலை இது. அவரைக் கண்ட விநாடியே நடிப்பு, பொய், நான், எனது ஆகிய அனைத்தும் மறைந்தொழிந்தன. ஏன் தெரியுமா? வேதங்கள்கூட இன்னும் அவனைக் காணாமல் ஐயா!' என்று அரற்றிக்கொண்டிருப்பவும்,