பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402--திருவாசகம்-சில-சிந்தனைகள்-5 VIII. இறையுணர்வில் ஈடுபட்ட தலைவியின் கூற்று இத்தொகுப்பினுள் ஒரே ஒரு பதிகம் மட்டும் வைக்கப் பெற்றுள்ளது: அன்னைப் பத்து (17) இந்நாட்டு அருளாளர்களின் தனிச்சிறப்பை எடுத்துக் காட்டுவது, அவர்கள் பாடிய பக்திப் பாடல்களில் உள்ள அகத்துறைப் பாடல்களேயாகும். அழிவிலாத பேரின்பம், இறையனுபவம், இறைக் காட்சி என்பவைபற்றிப் பாடப்பெறும் பக்திப் பாடல்களில் சிற்றின்பம் எங்கே புகுந்தது என்ற வினா நியாயமானதே ஆகும். மேனாட்டு அறிஞர்களான ஜி.யு.போப் போன்றவர்கள் இந்த வினாவிற்கு விடை காணத் தவறிவிட்டனர். எனவே, அகத்துறைபற்றி வரும் பாடல்களை ஒதுக்கித் தள்ளினர். இதன் தத்துவத்தைத் தமிழர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தனர். ஒருவன் ஒருத்தி என்ற இருவரின் மனம், கருத்து என்பவை ஒருமித்து ஒன்றுகூடி வாழ்வதே காதல் வாழ்க்கை எனப்பெறும். ஒருவனும் ஒருத்தியும் ஒன்றுகூடி வாழ்வதை உலகில் உள்ள பலரும் அறிவர். அப்படியானால் தமிழன் கண்ட அந்த அகவாழ்வின் தனிச்சிறப்பு என்ன என்ற வினாத் தோன்றுமன்றோ? அதற்கு விடை காணவேண்டுமேயானால் மிகப் பழமையான தொல்காப்பியத்திலிருந்து அருளாளர்கள் பாடிய பாடல்கள்வரை ஊன்றிக் கவனித்தல் வேண்டும். அவ்வாறு கவனிக்கும்போது ஒன்றை விளங்கிக்கொள்ள முடியும். காதல் வாழ்க்கையில் இருவர் இன்றியமையாதவர்கள். ஒரு தலைவனும் ஒரு தலைவியுமே இவர் ஆவர். தொடக்கத்தில் இவன் வேறு; அவள் வேறு; யாயும் ஞாயும் யாராகியரோ (குறுந்தொகை -40) என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடல் இந்தக் காதல் வாழ்க்கைக்கு