பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை_403 இலக்கணம் வகுக்கின்றது. தொடக்கத்தில் அவன் ஒரு தனி -916U(5 (unit); அவள் ஒரு தனி அலகு. இவர்கள் இருவருள்ளும் அன்பு தோன்றி வளர்கின்றது. பின்னர் அந்த அன்பு இருவரிடையே மாறிப் பாய்கின்றது. தொடக்கத்தில் அவன் வேறு, அவள் வேறாக இருப்பினும் சில காலத்தில் இந்த இரண்டு அலகுகளும் மாறிப்பாய்கின்ற அன்புவெள்ளத்தில் அமிழ்ந்துவிடுகின்றன. இதனை, மேலே காட்டிய குறுந்தொகைப் பாடலும் 'அன்புடை நெஞ்சம், தாம் கலந்தனவே என்று கூறிச்செல்கிறது. அவன் என்ற தனி அலகை எடுத்துக் கொள்வோமேயானால், இந்தக் காதல் தோன்றுவதற்கு முன்னர் அந்தத் தனி அலகு வீறுகொண்டு நிமிர்ந்து நின்றது. ஆனால் காதல் தோன்றி வளர்கையில் இந்த வீறும் நிமிர்ந்து நிற்கும் நிலையும் தலைசாய்ந்துவிடுகின்றன.

                                      • ----------------twossowa as or--------------a-போருள் அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல் மன்றம் படர்வித்தவள் (நெய்தல்கலி:24-8,9,10,

-ய-வடிநாவின் வல்லார் முன் சொல்வல்லேன் என்னைப் பிறர்முன்னர்க் கல்லாமை காட்டியவள் மேற்படி -18,19,20) என்று வரும் கலிப்பாடல் அடிகள் இந்த அன்பு, மாறிப்பாய்கின்ற காலத்தில் அவனுடைய 'நான்' அடங்கிவிடுதலை எடுத்துக்காட்டுகின்றன. காதல் முதிர முதிர இவை சாய்வதோடு அல்லாமல் இவற்றை உடையவனும் சாய்ந்துவிடுகிறான். இன்னும் வளர்ந்த நிலையில் அவனுடைய நான் மறைந்துவிடுகிறது. நான் முற்றிலுமாக மறைந்த நிலையே காதலின் உச்சகட்டம் ஆகும். இங்கு அவனுக்குச் சொல்லிய அனைத்து இலக்கணங்களும் அவளுக்கும் பொருந்தும். அதுவே