பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 திருவாசகம் சில சிந்தனைகள்-5 அன்புடை நெஞ்சம், தாம் கலந்த நிலையாகும். இதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். காதலின் உச்சகட்டத்தில் நான் முற்றிலுமாக மறைந்துவிடுகிறது. அவன் அவளுள்ளும், அவள் அவனுள்ளும் மறைந்து, நாம் என்ற சொல்லினுள் இரண்டு நான்களும் தம்மை இழந்த நிலையே குறிக்கோள்தன்மை பெற்ற காதலாகும். இதனையே கம்பநாடன் இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்'(கம்ப:மிதிலை-37) என்று பாடியுள்ளான். பக்தியிலும் இதே நிலைதான் என்பதை நாவரசர் பெருமானின் முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" (திருமுறை:6:25-7) என்று தொடங்கும் பாடல்மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஒன்றாக முளைத்து எழும் 'நான் விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு அந்த வடிவழகில் இன்பம் அடைகிறது. இப்பொழுது பக்தி மேலும் வளர்கிறது. வடிவழகையும் தாண்டி ஆனந்த சொரூபமாக இருக்கும் இறைவனிடம் ஈடுபடத் தொடங்குகிறது. அந்த ஈடுபாடு வளரவளர, நான் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைகிறது. எந்த நேரத்தில் இந்த நான் செயலிழந்து இறையனுபவ ஆனந்தத்தில் மூழ்கித் திளைக்கிறதோ அந்த நேரமே பக்தியின் உச்சகட்ட நிலையாகும். அதாவது காதலின் உச்ச கட்டமும், பக்தியின் உச்ச கட்டமும் ஒன்றுதான். இரண்டிலும் நான் முற்றிலுமாக அடங்கிவிடுகிறது. மடங்கிவிடும் இடம் காதலில் அவளாகவும், பக்தியில் அவன் ஆகவும் அமைகின்றது. இந்த இரண்டிற்கும் பொதுத்தன்மை 'நான் மறைவதேயாகும். தலைவன் தலைவியிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு ஈருடல் ஒருயிர் என்ற முறையில் வாழ்க்கையை நடத்துகிறான். உடல் இரண்டு; உயிர் ஒன்று. இதனையே