பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_495 அடிகளார் திருக்கோவையாரில் 71ஆம் பாடலில் காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்தாங்கு. தோகைக்கும், தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே' என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஒன்றை உறுதியாக அறிந்துகொள்ள முடியும். தலையாய பக்தி, தலையாய காதல் இந்த இரண்டிலும் நான் என்பது முற்றிலுமாக மறைவதே அவற்றின் இலக்கணமாகும். எனவே, இந்தப் பொது இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்ட பக்திப் பாடல்களில் அகத்திணை பற்றிய பாடல்கள் இடம்பெறுவது முறையேயாகும். காதல், பக்தி என்ற இரண்டிலும் தமிழர் கண்ட தனிச்சிறப்பு 'நான்' என்பதன் மறைவேயாகும். இவ்வாறு கொள்ளாவிட்டால் மூன்று வயது நிரம்பிய காழிப்பிள்ளையார் அவருடைய முதல் பதிகத்தின் பாடலிலேயே உள்ளங்கவர் கள்வன்' என்றும், பின்னர்ச் 'சிறையாரும் மடக் கிளியே. ஈசன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே திருமுறை:1-60:10) என்றும் பாடுவதும், அதேபோல் மூன்று வயதுடையவரும், புளிய மரப்பொந்திலிருந்து வெளிவராதவரும் ஆகிய நம்மாழ்வார் திருவாய்மொழி இரண்டாம் பத்தின் முதற்பாடலாக, “வாயும் திரைஉகளும் கானல் மடநாராய் ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால் நோயும் பயலைமையும் மீதுர எம்மேபோல் நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே (நாலாயிர2192) என்று பாடுவதும் வியப்பை விளைவிக்கும். இந்த நிலையில் மற்றொன்றை நினைவிற்குக் கொண்டு வருவது பொருத்தமுடையது என்று தோன்றுகிறது. பக்தியில் ஈடுபட்டவர்கள், நான் என்பதை இழந்து இறையனுபவத்தில் ஈடுபடும்பொழுது பெண்தன்மையை அடைகின்றனர் என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க.