பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406-திருவாசகம்-சில சிந்தனைகள்-5 அவர்கள் கூறக்கேட்டுள்ளேன். இதற்கு உதாரணமாக, வள்ளலாரின் படத்தைக் காட்டி, அந்த முகம் பெண்மைத் தன்மை உடையதாக இருப்பதைச் சுட்டியதையும் நினைவு கூர்கிறேன். ஆண்மகனாகப் பிறந்து வளர்ந்த வள்ளலார், ‘கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன், மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன்’ (திருஅருட்பா:3461) என்றும் பாடுவது பெண்களுக்குரிய இயல்பையேயாகும். இவற்றை யெல்லாம் மனத்துட் கொண்ட தமிழ்த்தென்றல் அவர்கள், இறைவன் ஒருவனே தலைவன்’ என்றும், உயிர்கள் அனைத்தும் தலைவி என்றும் இந்நாட்டவர் கொண்ட கொள்கை, வள்ளலார் போன்ற அருளாளர்கள் வாழ்வில் நன்கு விளங்கியது என்றும் கூறியதை நினைவு கூர்கிறேன். மணிவாசகப் பெருமானும் இதே மனநிலையில் இருந்துகொண்டு பாடியதே அன்னைப் பத்தாகும். உலக வாழ்வில் நன்கு ஈடுபட்டு அமைச்சராக இருந்து பல சுகபோகங்களை அனுபவித்த அடிகளார், ஒர் இளம் பெண்ணாகத் தம்மைப் பாவித்துக்கொண்டு, காதல் வயப்பட்டு, கிளர்ந்து எழும் உள்ளத்து உணர்ச்சிகளை அன்னைப் பத்தில் பாடினார். மணிவாசகர் நான்' என்பதை அறவே இழந்து ஒரு புதிய உலகத்தில் புகுந்து, முழுவதும் பெண்ணாகவே மாறிப் பாடியதாகும் அன்னைப் பத்து. 18. ஆழமான ஏக்கம் . . . . . இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளவை: 1) ஆனந்தமாலை (50)