பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை-407 2) அடைக்கலப் பத்து (24) 3) வாழாப் பத்து (28) 4) செத்திலாப் பத்து (23) இறையுணர்வில் ஈடுபட்ட தலைவியின் கூற்று என்ற தலைப்பை அடுத்துவரும் தலைப்பு 'ஆழமான ஏக்கம்’ என்பதாகும். இதில் கோக்கப்பட்டுள்ள நான்கு பதிகங்களும் எல்லையற்ற மனத்துயரத்தை, நம்பிக்கை இழந்த நிலையை வெளியிடும் பகுதிகளாகும். இந்த நிலை வளர்வதற்கு மூலமாக உள்ளது முதன்முதலில் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலையாகும். உள்நின்று உருக்குவர் (339) போதலும் என் உள்ளம் நையும் இது என்னே அன்னே' (346) என்ற பகுதி இந்த வளர்ச்சிக்கு விதையாகும். உள்நின்று ஒருவர் உருக்குகின்றார் என்றால் இது பெண்ணின் காதல் வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அப்படி உருக்கினவர் எந்த அளவுக்கு அப்பெண்ணின் நெஞ்சில் இடம் கொண்டார் என்பதை அவர் போதலும் என்னுள்ளம் நையும் (346) என்ற தொடர் எடுத்துக்காட்டும். போனவர் மீண்டு வாராமையால் தலைவியின் உள்ளத்தில் துயரம் மிகுந்து நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு 'வார்கடல் உலகில் வாழ்கிலேன்' (48) என்று சொல்லும் அளவிற்கு மனத்தளர்ச்சி ஏற்படுகிறது. இந்த அடிப்படையில்தான் அன்னைப் பத்தை முன்னர் வைத்து, இந்த நான்கு பதிகங்களையும் அதற்குப் பின்னர் வைத்துள்ளோம். 2 * * முன்னர்ப்பின்னர்த் தெரியாத ஒரு பொருளைப் பெறவேண்டும் என்ற ஏக்கம் மனத்திடைத் தோன்றுவது இல்லை. ஒரு பொருள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் தோன்றவேண்டுமேயானால், அது இரண்டே வகையில்தான்