பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை 409 மணிவாசகர் பெற்ற அனுபவத்தைப் புறத்தே நின்று பாடிக்கொண்டு வரும் அடிகளாருக்குத் திடீரென்று சலிப்புத் தட்டிவிடுகின்றது. புறத்தே நின்று அனுபவத்தைப் பாடிக்கொண்டிருப்பதைவிட மறுபடியும் அதனுள்ளே புகுந்து, தம்மை மறக்கும் பழைய நிலையை அடைய வேண்டும் என்ற ஏக்கம் மலைபோல வளர்ந்துவிடுகிறது. அந்த ஏக்கத்தின் எதிரொலிதான் இத்தொகுப்பில் காட்டப்பெற்ற நான்கு பதிகங்களும் ஆகும். ‘என்னால் அறியாப் பதம் தந்தாய் (644) என்பதால் இப்பதம் முன்னரே தரப்பெற்றது என்பதும் ‘யான் அது அறியாதே கெட்டேன்’ என்பதால் அதனை இழந்து நிற்கின்றேன் என்பதும் பெறப்பட்டன. அதனை இழப்பதற்குக் காரணம் தாமே என்பதை விளக்க 'உன்னால் ஒன்றும் குறைவில்லை என்றும் பாடுவதால் இந்த ஏக்கம் எவ்வளவு ஆழமானது என்பதை அறியமுடிகின்றது. எனவே, இந்த ஏக்கத்தின் தொடக்கத்தைப்பற்றிப் பேசும் ஆனந்த LᏝᏍITöᏊy இத்தொகுப்பில் முதலாக வைக்கப்பெற்றுள்ளது. அடுத்து நிற்பது அடைக்கலப் பத்தாகும். ஆனந்த மாலையில் இனி உன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே’ (643) என்றும், பிற்பட்டிருந்தேன் நோய்க்கு விருந்தாயே’ (644) என்றும், கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே (645) என்றும் புலம்பிய அடிகளார், இவை கைவராமல் போகவே அவனிடம் கேட்டோ முறையிட்டோ பயனில்லை, அவனாகச் செய்தாலன்றித் தம் விருப்பம் நிறைவேறாது என்பதை உணர்ந்ததாற்போலும், இவ்வேண்டுதலை எல்லாம் விட்டுவிட்டு உடையாய் அடியேன் உன் அடைக்கலமே என்ற முறையில் அடைக்கலப் பத்து என்ற பதிகத்தையே வைக்கின்றார். 'உடைமைக்கு ஒரு முழுக்கு உடையானுக்குப் பத்து முழுக்கு” என்ற óᎧafèüFᏯaj முதுமொழிக்கிணங்க