பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 0 திருவாசகம் சில சிந்தனைகள்-5 அடைக்கலமாக வந்துவிட்ட தம்மை, தக்க வழிகாட்டி ஆட்கொள்ள வேண்டியது அவனுடைய பொறுப்பு என்பதை வெளிப்படையாகக் கூறாமல், ‘அடியேன் உன் அடைக்கலமே என்று கூறி விட்டுவிட்டார். அடிமைக்குரிய இலக்கணப்படி உடையானிடம் இன்னது செய்க என்று கட்டளையிடுவதோ, தமக்கு இன்னது வேண்டும் என்று கேட்பதோ தவறாகும். அந்த அடிப்படையில் கேட்கவோ உரிமையில்லை, தாம் கேளாமலிருக்கையில் அவன் கொடுப்பதாகவும் தெரியவில்லை என்ற நிலையில், இனி என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கின்றார். அந்த நிலையில்தான் மூன்றாவதாக உள்ள வாழாப்பத்து இடம்பெறுகிறது. அவனும் கவனிக்காமல், தாமும் வெளிப்படையாக ஒன்றை வேண்டும் நிலையும் இல்லாமல் இருக்கும் இந்த அவலநிலையை நினைந்தவுடன் 'வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்” (448) என்று பாடுகிறார். எத்தனையோ பேருக்கு எத்தனையோ காரணங்களால் உலகில் வாழ விருப்பம் இல்லாமல் போகலாம். வாழ்கிலேன் கண்டாய் என்றுமட்டும் பாடியிருந்தால், வேறு ஏதோ காரணத்தால் இவருக்கு வாழ விருப்பமில்லை என்று பொருள்பட்டுவிடும் அல்லவா? இந்த இக்கட்டை நீக்க வாழ்கிலேன் கண்டாய்” என்பதற்கு முன்னும் பின்னுமாக இரண்டு அற்புதமான தொடர்களை வைத்துப் பாடலை முடிக்கின்றார். 'ஆண்ட நீ அருளிலையானால் என்ற தொடரை முதலில் கூறுவதன் மூலம் வாழ விருப்பமின்மைக்கு விளக்கம் கூறினாராயிற்று. இதனைக் கூறிய அடிகளார் வாழ்க்கை முடிவதற்குமுன் கடைசி விருப்பமாக ஒன்றை வெளியிடுகிறார்."நீயோ அருளில்லாதவனாக ஆகிவிட்டாய். எனவே, இந்த வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. அடைக்கலமாக இருப்பினும், என்னுடைய கடைசி