பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை-41 விருப்பத்தை இதோ சொல்லிவிடுகிறேன். அதற்கு மேல் உன் விருப்பம்’ என்று கூறுவார்போல வருக என்று அருள்புரியாயே என்று கூறுகிறார். இத்தொகுப்பில் அடுத்து நாம் வைத்துள்ளது செத்திலாப் பத்தாகும். வாழ்கிலேன்' என்றும் வருக என்று அருள்புரியாய் என்றும் வாழாப் பத்தில் பாடியமையால் செத்திலாப் பத்தை இதன்பின்னர் வைத்துள்ளோம். இது கொஞ்சம் புதுமையானது. வாழ விருப்பமில்லாத ஒருவர், வாழ்வைத் துறக்க வேண்டியதுதானே! அதனைச் செய்யாமல் செத்திடப் பணியாய்’ என்று கூறுவதன் நோக்கம் என்ன? அடைக்கலப் பத்து, வாழாப் பத்து, செத்திலாப் பத்து என்ற மூன்று பதிகங்களையும் ஒன்றாக வைத்துப் படித்துப்பார்த்தால் செத்திடப் பணியாய் என்று ஏன் கூறினார் என்பது விளங்கும். உடையவன் கவனக்குறைவாக இருந்துவிட்டதால், என்ன செய்வது என்ற நினைவில் உடையாய் என்று விளித்து ‘அடியேன் உன் அடைக்கலம்’ என்றார். விளிக்கப்பட்டதால் உடையவன் திரும்பிப் பார்க்கிறான்போலும், உடனே திரும்பிப் பார்த்தவனுக்கு நினைவூட்டுவதுபோல ஐயா, நீ மறந்துவிட்டாய்போலும், நீதான் முன்னர் என்னை ஆண்டவன். இப்போது பராமுகமாய் உள்ளாய். இந்த நிலையில் அடைக்கலமாகிய நான் என்ன செய்யமுடியும்? இந்த உலகில் நான் வாழவிரும்பவில்லை என்ற வகையில் பாடிவிட்டார். இப்பொழுது ஒரு புதிய நினைவு தோன்றுகிறது. வாழ விரும்பாதவர் போகவேண்டியதுதானே என்ற நினைவு வந்தவுடன் தாம் அடிமை என்ற நினைவு வருகிறது. தமக்கோ வாழ விருப்பமில்லை; உடம்பைப் போக்கிக்கொள்ள, அடைக்கலப்பட்ட, உடைமைப்பொருளுக்கு