பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 திருவாசகம் சில சிந்தனைகள்-5 உரிமையும் இல்லை. இந்த இரண்டும் நினைவுக்கு வந்தபொழுது, இனிக் கூடும் வண்ணம் இயம்பாயே என்ற வேண்டுகோளையோ வருக என்று அருள்புரியாய் என்ற வேண்டுகோளையோ மறுபடியும் விடுக்காமல் செத்திடப் பணியாய் திருப்பெருந்துறை மேவிய சிவனே' (400) என்று பாடுகிறார். "செத்திடப் பணியாய் என்று கேட்டதிலும் ஒரு சிறப்பைக் காணமுடிகிறது. இறையனுபவத்தைக் கொடுத்தவரோ ஒருவர். அது போய்விட்டது என்ற காரணத்தால் வேறு ஒருவரிடம் போய் எனைச் செத்திடப் பணியாய்” என்று வேண்டிக்கொண்டால் அது பொருத்தமாயிராது. அதற்குப் பதிலாக எந்த ஒருவர், வழியோடு போன தம்மை அழைத்து, ஆட்கொண்டு, திருவடி தீட்சை செய்து, உலப்பிலா ஆனந்தத்தை அருளினாரோ அவரிடமே சென்று 'ஐயா, நீ கொடுத்ததெல்லாம் காணாமல் போய்விட்டது. மறுபடியும் எத்தனையோ முறை வேண்டினேன். நீ மனம் இரங்குவதாகத் தெரியவில்லை. உன்னிடமே வேண்டிக் கொள்கிறேன். அதனைக் கொடுத்த நீ இதனையும் கொடுப்பாயாக’ என்ற பொருள்படத் திருப்பெருந்துறை மேவிய சிவனே, எனைச் செத்திடப் பணியாய் என்று முடிக்கின்றார். X. மிகு அவா இந்தத் தொகுப்பினுள் கீழ்வரும் பதிகங்கள் இடம்பெறுகின்றன: 1. கோயில் மூத்த திருப்பதிகம் (2) 2. புணர்ச்சிப் பத்து (27) மிகு அவா என்பது பேராசை என்று இக்காலத்தில் வழங்கப்பெறுகிறது. அவா அல்லது ஆசை என்பது எல்லா