பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை-413 உயிர்களையும் பற்றிநிற்கும் ஒன்றாகும். விலங்குகளைப் பொறுத்தமட்டில் அவற்றிற்கும் ஆசையுண்டு, அந்த ஆசை உணவு, பாலுணர்ச்சி என்பவற்றோடு நின்றுவிடும். ஆனால், மனிதர்களைப் பொறுத்தமட்டில் அவர்களிடம் தோன்றும் ஆசைகளுக்கு அளவேயில்லை. ஆசைக்கோர் அளவில்லை’ என்று தாயுமானவப் பெருந்தகையும் பாடுகின்றார். அடிகளாரும் பேராசையாம் இந்தப் பிண்டம் (284) என்று பாடுகிறார். அப்படியானால் ஆசை என்பது எது? பேராசை என்பது எது? இந்த வினாவிற்கு விடை காண்பது கடினம். ஆசையையும் பேராசையையும் பிரிக்கும் கோடு மிக நுண்மையானது; இடம் மாறிக்கொண்டேயிருப்பது. மனிதனுடைய மனத்தில் தோன்றும் பல்வேறு உணர்ச்சிகளுள் ஆசையும் ஒன்று. ஒரு பொருளிடத்து ஆசை ஏற்படும்பொழுதும் அம்மனத்தின் ஏனைய பல்வேறு பணிகள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கும்; இந்த ஆசை காரணமாக எந்தப் பணியும் நின்றுவிடுவதில்லை. இது இயல்பான ஆசை அல்லது அவா எனப்படும். இதன் மறுதலையாகப் பேராசை என்பது, மனத் திடைத் தோன்றிய ஆசை, ஆலமரம்போல் எல்லைமீறி வளர்ந்து, அந்த மனத்திடை வேறு எண்ணங்களுக்கே இடமில்லாமல் செய்துவிடும் ஒன்றாகும். எந்த ஒன்றும் தனக்குரிய அளவுக்குமேல் வளரத்தொடங்கினால் ஏனையவற்றிற்கு இடமில்லாமல் போய்விடும். உலகப் பொருட்களைப் பொறுத்தமட்டில், எந்த ஒன்றின்மேலாவது தோன்றிய ஆசை, பேராசையாக வளருமேயானால் அது அவனுக்கு நலம் செய்யாமல் அவனை அழிப்பதும் அல்லாமல் அவனைச் சார்ந்துள்ள குடும்பம், சமுதாயம் என்பவற்றையும் அழித்துவிடும். பேராசையின் இலக்கணம் இது என்றாலும், இதற்கு ஒரு புற நடை உண்டு. ஆசை, பேராசை என்ற இரண்டுக்கும் அடியில் இருப்பது நான் தான் என்றாலும்