பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_415 அடியார்கள் எது கேட்டாலும் மறாமல், முழுமனத்துடன் அகமகிழ்ந்து தருவது என்பதுதான், இந்த அடியார்களின் குறிக்கோளேதவிர, தரக்கூடியது எது தரக்கூடாதது எது என்ற பாகுபாடு இவர்களுக்குத் தோன்றுவதேயில்லை. மண் ஓடானாலும், செம்பொன்னா னாலும் அவற்றை ஒருபடித்தாகப் பார்க்கின்ற இந்த அடியார்கட்குத் துணி, பிச்சை ஒடு, பிள்ளைக்கறி, மனைவி என்பவற்றிடை எவ்வித வேறுபாடும் தோன்றுவதில்லை. தங்கள் குறிக்கோள் ஒன்றைத்தவிர இவர்கள் சிந்தனை வேறு எங்கும் செல்வதில்லை. அந்தக் குறிக்கோளை விடாது பற்றிநிற்கும் அவாவைத்தான் மிகு அவா என்று இங்குச் சொல்கிறோம். - குமரகுருபரர் இந்தக் கருத்தையே பின்வருமாறு பாடியுள்ளார்: மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார் (நீதிநெறிவிளக்கம்-52) உலகப் பொருள்களில் பேராசை கொண்டு தம்மையே மறந்து திரிபவர்களுக்கும் கடவுட்பித்து, குறிக்கோட் பித்துக் கொண்டு திரியும் அருளாளர்களுக்கும் இப்பாடல் பொருந்துவதாகும். உலகியலாரின் பேராசை பெரியோர்களால் இழித்துரைக்கப்பட்டது; குறிக்கோள் நாட்டமுடையோர் பேரவா பெரியோர்களால் போற்றி வரவேற்கப்பட்டது. உலகப் பொருட்களிடத்து ஒருவனுக்குப் பேராசை தோன்றுமேயான்ால் அதுவே அவனை அழிக்கும். கொண்ட குறிக்கோளிடத்து மிகு அவா தோன்றுமேயானால் இந்தப் பேரவா இந்தப் பிறப்பிலேயே அவரை வீடுபேறு அடையச் செய்யும்.