பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416-திருவாசகம் சில சிந்தனைகள்-5 அமைச்சராக இருந்த திருவாதவூரருக்கு நூற்றுக் கணக்கான ஆசைகள் இருந்திருக்கும். அந்த ஆசைகள் வெறும் ஆசை அளவில் நின்றுவிட்டனவா, அல்லது பேராசையாக வளர்ந்து விட்டனவா என்று சொல்ல ஆதாரங்கள் ஏதுமில்லை. திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு அடிகளாரின் மனத்தில் எல்லா ஆசைகளும் அறவே ஒழிந்துவிட்டன. இந்தப் பல்வேறு ஆசைகள் குடியிருந்த இடத்தில் இரண்டு பேரவாக்கள் தோன்றி, அவர் மனம் முழுதும் வியாபித்து மலைபோல் வளர்ந்துவிட்டன. அதனால் எந்த நேரமும் இந்த இரண்டு அவாக்களின் பிடியில் சிக்கியே இருக்கின்றார். தம்மைச் சில விநாடிகளில் மணிவாசகராக மாற்றிய குருநாதரை ஓயாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்; தம்மை ஆட்கொண்ட திருவடிகளை இறுகத் தழுவிக்கொள்ள வேண்டும் என்ற அவா மலைபோல் வளர்ந்துவிட்டது. இரண்டாவது பேரவா, திருப்பெருந் துறையில் குருநாதர் எதிரே அமர்ந்திருந்த அடியார் கூட்டத்திடைத் தாம் மீட்டும் அமர வேண்டும் என்பதாகும். எதிரே காணப்பெற்ற குருநாதரைப் பார்த்துக் கொண்டே இருத்தல், அவர் திருவடிகளைப் பற்றித் தழுவிக்கொண்டேயிருத்தல் இவை இரண்டும் எங்கே, எப்போது நடைபெறவேண்டுமென்றால், அடியார் கூட்டத்திடை தாம் இருக்கும்பொழுது நடைபெறவேண்டும் என்பதே அவர் பேரவாக்களாகும். - குருநாதர் தரிசனம் மீட்டும் வேண்டும் என்பதைப் பல இடங்களில் பாடியுள்ளார். ஆனால், தூரத்தே அமர்ந்து குருநாதரைத் தரிசித்திருப்பதைக் காட்டிலும், நெருங்கி