பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48-உதிருவாசகம் சில சிந்தனைகள்-5 குருநாதர் காட்சி கிடைத்தவுடன் அவருடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டிருந்த அந்த ஆனந்த அனுபவம் மீட்டும் கிடைக்கவேண்டும் என்ற மிகு அவா விசுவரூபம் எடுக்கிறது. அதனை வெளிப்படுத்துவதே புணர்ச்சிப் பத்தாகும். -அள்ளுறு உள்ளத்து அடியார்முன் வேண்டும் தனையும் வாய்விட்டு அலறி விரையார் மலர்தூவி (உன்திருவடியை) பூண்டுகிடப்பது என்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. (440) என்ற தொடரில் இரண்டு அவாக்களும் பேசப்பெறுதைக் காணலாம். இதன் காரணமாகவே ‘மிகு அவா என்ற தலைப்பில் இந்த இரு பதிகங்களையும் வைத்துள்ளோம். XI. காட்டியதும் கண்டதும் இத்தலைப்பில் பின்வரும் பதிகங்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. 1. திருக்கழுக்குன்றப் பதிகம் (30) 2. கண்ட பத்து (3) இதற்கு முந்தைய தலைப்பாக உள்ள மிகு அவாவில் அடிகளார் மனத்தில் தோன்றி வளர்ந்த இரண்டு பெரிய மிகு அவாக்களைப்பற்றிக் கண்டோம். அதனையடுத்துக், 'காட்டியதும் கண்டதும் என்ற தலைப்பு வைக்கப்படுவது பொருத்தமாகும். திருக்கழுக்குன்றம் சென்றபொழுதுகூட அடிகளாரின் நினைவு பெருந்துறை நிகழ்ச்சியில் தோய்ந்திருந்தது