பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை_49 என்பதைத் திருக்கழுக்குன்றப் பதிகத்தின் முதற்பாடலின் முதலடியிலேயே காணமுடிகிறது. கழுக்குன்றத்தில் தோன்றிய முதல் நினைவு பெருந்துறை நினைவே ஆகும். "பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் (468) என்று தொடங்குவதால் அவருடைய உள்ளத்தை ஆட்கொண்டிருந்த பெருநினைவு இது என்பதை அறியமுடிகின்றது. இப்பதிகத்தில் இன்று கிடைத்துள்ள ஏழு பாடல்களில் (468.474) ئی۔aill{{ பாடல்கள் பெருந்துறைபற்றிப் பேசுகின்றன என்றால், குருதரிசனம் மீட்டும் கிடைக்கவேண்டும் என்ற மிகு அவா அடிகளார் உள்ளத்தில் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை அறிய முடிகின்றது. இந்த நினைவைப் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளாரே! அப்படியிருக்க, கழுக்குன்றப் பதிகத்தில் என்ன சிறப்பு என்ற ஐயம் பலருக்கும் தோன்றலாம். உண்மையைக் கூற வேண்டுமேயானால், அடிகளாரின் மிகு அவா முழுவதுமாக நிறைவேறிய இடம் கழுக்குன்றே என்று சொல்ல வேண்டும். திருப்பெருந்துறைக் குருதரிசனத்தில் குருநாதரை மட்டுமா கண்டார்? தம்மை ஆட்கொண்ட குருநாதரைக் கண்டார்; ஒர் அந்தணனைக் கண்டார்; செந்தழல் புரை திருமேனியுங் கண்டார்; உமையொருபாகனைக் கண்டார்; தில்லைக் கூத்தனையும் அல்லவா கண்டார். இத்தனை காட்சிகளும் அடிகளார் மனத்தில் ஒடிக்கொண்டிருந்தது உண்மைதான். திருக்கழுக்குன்றத்தில், திருப்பெருந்துறைப் பெருமான் காட்சி தொடங்கி தில்லைக்கூத்தன் காட்சிவரை நினைந்து, அவற்றை மீட்டும் பெறுவது என்று கொல்லோ என்று வருந்தினார் போலும், அடியார் துயரைப் பொறுக்க மாட்டாத, கழுக்குன்ற நாதன் அடிகளார் மனத்தில் தோன்றிய பேரவா முழுவதையும் நிறைவேற்றத் திருவுளம் கொண்டான். Llół) திருக்கோலங்களை அடிகளாருக்குக் காட்டினான்.