பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 திருவாசகம் சில சிந்தனைகள்-5 கழுக்குன்றநாதனை, எதிரே நின்று வழிபடுகிறார் அடிகளார். என்ன அதிசயம்! ஒரு விநாடிக்கு முன்னர்க் கண்ட கழுக்குன்ற நாதன் எதிரே இல்லை. அந்த இடத்தில் பெருந்துறைப் பெருமான் அல்லவா இருக்கிறான்! அதுவும் ஒரு விநாடிதான். குருநாதர் முதல் அடியார் கூட்டம் வரைப் பல காட்சிகள் வந்து வந்து மறைகின்றன. அந்தக் காட்சிஆனந்தத்தில் ஈடுபட்ட அடிகளார், கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய்க் கழுக்குன்றிலே (458) என்று பாடுகிறார். ஏழாவது (474 பாடலில் அடியார் முனே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே’ என்று பாடுவதால் மிகு அவாவின் முழு நிறைவேற்றத்தைத் திருக்கழுக்குன்றத்தில் அடிகளார் கண்டார் என்பது தெரிகிறது. கோலம் காட்டினாய்’ என்ற தொடரைப் பயன்படுத்தியதால், என்றுமே உள்ள அத்திருக்கோலங்களை அடிகளார் ஊனக்கண்களாலும் காணுமாறு காட்டினான் என்பதையே இத்தொடர் விளக்கி நிற்கின்றது. குருநாதர் திருவருள் பெற்று இந்த அளவு வளர்ச்சியடைந்த நிலையிலும், அடிகளார்போன்றவர்கள் காணமுடியாத Ljół) திருக்கோலங்கள் தமக்கு உண்டு என்பதைத் ‘காணொணாத கோலங்களைக் காட்டினான் (47) என்பதன் மூலம் குறிப்பிடுகிறார். இந்தக் காட்சி கிடைத்தவுடன், அடிகளாருக்கு ஒன்று புரிகிறது. தாம் முன்னர்க் கண்ட கோலங்கள், இப்போது காணுகின்ற புதிய கோலங்கள் என்பவற்றை வரிசைப்படுத்திப் பார்க்கும்பொழுது இப்புதிய கோலங்களில் இதுவரையில் காணஒண்ணாத t_Jół) திருக்கோலங்கள் இருப்பதை உணர்கின்றார். ஆதலால்தான் கணக்கிலாத் திருக்கோலம் என்று முதற்பாட்டில் பாடியவர் கணக்கிலா என்ற சொல் எண்ணிக்கையைக் குறிக்கின்றதே தவிர, தன்மையைக் குறிக்கவில்லை என்பதை உணர்த்தப்போலும் 'காணொணாத் திருக்கோலம்’ என்று நான்காம் (47) பாடலில் பாடுகிறார்.