பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை_42) எந்த அளவு வளர்ச்சியைடந்தபோதிலும், உடல் தொடர்பு இல்லாமல் ஆன்மா தனித்து நிற்கும் பொழுதுகூட காணஒண்ணாத சில காட்சிகளை இந்த உடம்புடன் இருக்கும்பொழுதேகூட, தமக்குக் காட்டினான் என்பதையே காணொணாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய்’ என்று பாடுகிறார். இப்பதிகத்தின் ஏழு பாடல்களிலும் காட்டினாய்’ என்ற சொல் பயன்படுத்தப் பெற்றுள்ளது. எத்தகைய அருளாளர்களும், வளர்ச்சியடைந்தவர்களும் இந்தப் பருவுடம்புடன் இருக்கின்றவரையில் கருத்தாலோ கண்ணாலோ காணஒண்ணாத இறைக்காட்சிகள் பல ஆண்டு என்பதை அறியமுடியும். கருத்தாலும் காணமுடியாத ஒரு பொருள் கண்ணாலும் காணக்கூடிய வகையில் தானே முன்வந்து தன்னைக் காட்டிக் கொண்டாலொழிய யாரும் காண ஒணாது. கருணையே வடிவான குருநாதர்' தம்முடைய பல்வேறு திருக்கோலங்களை தாமே காட்ட முற்பட்டதால்தான் அடிகளாரால் காணமுடிந்தது. இதே கருத்தை நாவரசர் பெருமானும் 'காண்டார் ԱյՈrrr கண்ணுதலாய் காட்டாக்காலே என்று பாடிப்போந்தார். அடுத்து நிற்பது கண்ட பத்தாகும். இப்பதிகத்தின் பெரும்பாலான பாடல்கள் தில்லை கண்டேனே' என்று முடிகின்றன. இதற்கு முன்னர் அடிகளார் கண்ட தில்லைக் காட்சிக்கும் இப்போது கண்ட தில்லைக் காட்சிக்கும் வேறுபாடு இருக்கின்றது. இதற்கு முன்னர்க் கண்ட காட்சியில் தில்லைக்கூத்தன் தரிசனம் தந்தான். அப்பொழுதும் அடிகளார் கண்டது ஐம்பொன் சிலையை யன்று. கூத்தனின் பல்வேறு நடனங்களில் ஆனந்த நடனத்தின் ஒரு பகுதியைக் கண்டார். ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக, குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக (பெ.பு:தடுத்து. 106) அடிகளார் கண்டார்.