பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422-திருவாசகம் சில சிந்தனைகள்-5 ஆனால், கண்ட பத்துப் பாடுகின்ற நிலையில் 'அணிகொள் தில்லை கண்டேனே' என்று பாடுகிறாரே! தில்லையில் எதனைக் கண்டார்? நடனமிடும் கூத்தனின் கூத்தின் ஒரு நிலையையா கண்டார்? இல்லை. கூத்தன், அதனைக் காண்கின்ற அடிகளார், காட்சி என்ற மூன்றும் மறைந்து அந்தமிலா ஆனந்தம் ஒன்றுமட்டுமே அங்கு நிலைபெறுகிறது. இந்த ஆனந்த அனுபவத்தினின்று வெளிவந்த நிலையில், இதனைப் பெற்றிருந்தது தாமே என்பதை உலகுக்கு உணர்த்த வந்த அடிகளார் கண்டேன்’ என்ற தன்மை ஒருமை வினைமுற்றால் கூறுகிறார். ஆனந்தம் என்பது விவரிக்கவோ விளக்கவோ எடுத்துக்கூறவோ முடியாத உள்ளத்தின் ஒருநிலை ஆகும். மேல்மனத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, இன்பம் ஆகிய உணர்ச்சிகள் போன்றதன்று இது. இந்த ஆனந்தம், அடிச்சித்தத்தில் தோன்றுவதாகும். நம்முடைய முயற்சியால் இதனைத் தோற்றுவிக்கவோ உள்ளே செலுத்தவோ முடியாது. இந்த அடிப்படையில்தான் ஆனந்தத்தைக் கண்டேன் என்று பாடுகிறார் அடிகளார். ஆனந்தத்தை அனுபவிக்க முடியுமே தவிரக் காண்பது எப்படி? இந்த ஆனந்தத்தைச் சித்தத்தில் தோற்றுவித்தவன் எப்படி இருக்கிறான்? கூத்தன் வடிவிலா? இல்லை. கூத்தன் வடிவில், எடுத்த பொற்பாதம், அதனைச் சுட்டுகின்ற இடதுகை நீட்சி, அஞ்சேல் என்ற வலக்கரம் என்பவை இப்பொழுது காட்சியளிக்கவில்லை. பின்னர் எதனை அடிகளார் கண்டார்? கூத்தன் வடிவத்தையே முதலிற் கண்டார்; சில விநாடிகளில் இந்த வடிவம் மறைகிறது. அடிச்சித்தத்தில் தோன்றிய ஆனந்தம் இப்போது வெளியேயும் காட்சி தருகிறது. சர்க்கரையில் செய்த மிளகாய், மிளகாயின் இயல்பு எதுவும் இல்லாமல் அதன் வடிவுமட்டும் பெற்றுச்