பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை 423 சர்க்கரையின் இயல்பை வெளிப்படுத்துவதுபோல் ஆனந்த சொரூபனாகிய கூத்தன் நடனமாடும் காட்சியை நல்குகிறான். மிகச் சாதாரண மக்கள் ஐம்பொன்னால் வடித்த சிலையைக் கண்டனர். சற்று உயர்ந்தவர்கள் சிலையின் வடிவத்தில் சில உட்பொருட்களைக் கண்டனர். இன்னும் உயர்ந்தவர்கள், சிலையைக் கடந்து நிற்கும் அவன் உண்மைச் சொரூபத்தை உணர்ந்தனர். அடிகளார் போன்ற அருளாளர்களுக்குத் தில்லைக்கூத்தனுக்குப் பதிலாக, கட்புலனுக்கு உட்படாத ஆனந்தம் என்னும் பண்பு இப்பொழுது வடிவு பெற்று எதிரே நிற்கின்றது. அடிகளாரின் நிலைக்குக் கீழே உள்ளவர்கள், இந்த ஆனந்தத்தை உணர்ந்தார்கள். அவர்களைவிடப் பல மடங்கு மேலே சென்றுள்ள அடிகளார் அந்த ஆனந்தத்தை உணர்ந்ததோடு, அனுபவித்ததோடு அந்தப் பண்பினைக் கண்ணாலும் பார்க்கிறார். மனிதர்களுக்குரிய பூத உடம்பிலுள்ள பசுகரணங் களெல்லாம் பதிகரணங்களாக மாறிய நிலையிலாவது இக்காட்சி கிட்டுமா? சந்தேகந்தான். அப்படியானால் ஆனந்தமாகிய பண்பை, அதனையே வடிவாகக் கொண்டுள்ள ஒருவனை எப்படிக் காண்பது? அதற்கு ஒரு வழி கூறுகிறார் அடிகளார். திருவாதவூரராகவோ மணிவாசகராகவோ உள்ள நிலையில் ஆனந்தத்தைக் கண்ணால் காணமுடியாது. ஆனால் கண்டேன்' என்று சொல்கிறாரே அடிகளார்! ஆழ்ந்து நோக்கினால் காண்பதற்குரிய வழியையும் அவரே கூறக் காணலாம். 'சிவமாக்கி எனையாண்ட (175) என்ற தொடர் சிந்தனைக்குரியது. சிவமாக ஆக்கப்பட்ட நிலையில் எதிரே உள்ள ஆனந்த சொரூபத்தை அவரால் காணமுடிந்தது.