பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை-0-425 பண்பை அறிவதற்கோ உணர்வதற்கோ பதிலாகக் கண்களாலும் காணுமாறு செய்தவன் அவன் ஆதலால் 'காட்டினான்’ என்ற சொல்லுக்கு அவனே பொருளாதல் காணலாம். இதனையே அடிகளார் “காட்டாதனவெல்லாம் காட்டிப்பின்னும் கேளாதனவெல்லாம் கேட்பித்து (32) என்று பாடுகிறார். இதனாலேயே இவ்விரண்டு பதிகங்களும் காட்டியதும் கண்டதும் என்ற தொகுப்பில் வைக்கப்பெற்றுள்ளன. XII. பிரார்த்தனை இத்தலைப்பினுள் பின்வரும் பதிகங்கள் இடம்பெறுகின்றன: - 1. ஆசைப் பத்து (25) 2. பிரார்த்தனைப் பத்து (32) 3. எண்ணப் பதிகம் (44) 4. அருட் பத்து (29) 5. குழைத்த பத்து (33) 6. பண்டாய நான்மறை (48) பிரார்த்தனை என்ற சொல் வேண்டிக்கொள்ளுதல் என்ற பொருளைத் தரும். உயிர்வர்க்கத்தில் உயர்ந்தது மனிதப்பிறவி என்பர். மனிதர்களைத் தவிரப் பிற உயிர்கள் தங்களுக்கு வேண்டும் பொருள் எங்கே உள்ளது என்பதை அறிந்து அங்கே சென்று அதனைத் துய்க்கின்றன. ஆனால், மனிதன் நிலை வேறு. அவனுடைய விருப்பங்கள், வேண்டுதல்கள் எண்ணில் அடங்காதவை. தனக்கு வேண்டும் என்ற ஒன்றைத் தன்னைவிடப் பெரியவர்களிடம்