பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 திருவாசகம் சில சிந்தனைகள்-5 சென்று அதனைத் தருமாறு வேண்டிக்கொள்ளுதல் ஒருமுறை. அதாவது வேண்டப்படுவர் தம்பால் உள்ள ஆற்றலால் எதிரே உள்ளவர் அதாவது வேண்டியவர், வேண்டும் பொருளைப் பெற்றுத் தருவர். ஆனால், இந்த வேண்டல் வேண்டப்படுவோரின் தகுதிக்கு மிக மேற்பட்டும் அவர்கட்குக் கிட்டாததாயும் இருக்குமேயானால் அவர்கள் அதனைத் தர முடியாது. எனவே, வேண்டுபவர் மிக்க அறிவுக்கூர்மையுடன் ஒன்றைச் சிந்தித்துச் செய்ய வேண்டும். தாம் வேண்டும் பொருள் வேண்டப்படுபவரால் தரக்கூடியதா, அவர்கள்பால் இல்லையென்றாலும் அதனைப் பெற்றுத்தரும் ஆற்றல் அவரிடம் உள்ளதா என்பதையெல்லாம் சிந்தித்து, அவர்களால் முடியும் என்பதை அறிந்தபிறகே, தம் வேண்டுதலைத் தெரிவிக்க வேண்டும். இதுவே, பிரார்த்தனையின் அடிப்படையும் விளக்கமுமாகும். அடிகளார் தம்முடைய பிராத்தனையைப் LJØR) பதிகங்களில் வெளியிடுகிறார். அவற்றைத் தொகுத்து வரிசைப்படுத்திக் கூறுவதே இத்தொகுப்பின் நோக்கமாகும். இப்போது அடிகளார் வேண்டுவனவற்றை இத் தொகுப்பில் உள்ள பல பாடல்களிலிருந்தும் காணமுடியும். 'பாருருவாய பிறப்பு அற வேண்டும், பத்திமை பெற வேண்டும்’ (599) என்பது ஒரு வேண்டுகோள். தம்மிடமுள்ள இந்த உடம்பு எத்தகையது என்பதை “மொய்ப்பால் நரம்பு கயிறாக (419) என்ற பாடலிலும் 'சீவ்ார்ந்து (420) என்று தொடங்கும் பாடலிலும் 'மிடைத்தெலும்பு (42) என்று தொடங்கும் பாடலிலும் வெளிப்படுத்துகிறார். இவ்வளவு கேவலமான உடலை வைத்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் இந்தப் பிறப்பைப் போக்கி அவனுடைய அடியார் கூட்டத்திடைக் கூடும் வாய்ப்பைப் பெறவேண்டும்; இந்த அருளைப் புரிந்து அவன் ஆட்கொள்ள வேண்டும் என்று மனம் உருகி