பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_421 அடிகளார் வேண்டும் பாடல்களையுடைய பதிகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இனி, இவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம். முதலாவதாக உள்ளது ஆசைப் பத்து என்பதாகும். இப்பதிகம் முழுவதும் 'ஆசைப்பட்டேன் கண்டாய் என்று முடிவதைக் காணலாம். ஆசை என்பது மனிதர்களுக்கு எழும் இயல்பானதொன்றாகும். ஆனால், கேவலமானதும் அழியக்கூடியதும் நிலையற்றதும் ஆகிய பொருட்களின் மேல் ஆசை வைப்பதைக் காட்டிலும் இறப்ப உயர்ந்ததும், நிலைபேறுடையதுமான இறையருளில் நம்பிக்கை வைத்து, அது தனக்குக் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுதல் சிறப்புடையதாகும். ஆசை என்பது உடம்பு உள்ளவரை அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்குமாதலின் அதனைப் போக்குவது இயலாத காரியம். ஆனால், நீக்க முடியாத அந்த ஆசையை அது செல்லும் வழியைத் தவிர்த்து மற்றொரு வழியில் மடைமாற்றம் செய்யக் கூடுமேயானால், அது வாழ்வில் சிறந்த பயனை நல்கும். அடிகளாரின் ஆசை எத்தகையது என்பதை 'அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன்' (48), அப்பா காண ஆசைப்பட்டேன்' (419), 'உன் திரு மலர்ப்ட்iாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன்’ (42) முதலாய தொடர்கள் மூலம் அடிகளாரின் ஆசை எந்தத் திசையில் செல்கின்றது என்பதை அறியமுடிகின்றது. ஒவ்வொரு பாடலிலும் 'அம்மானே’ என்று விளித்து, 'ஆசைப்பட்டேன்’ என்று கூறுகிறவர் கண்டாய்' என்கிற ஒரு சொல்லையும் தவறாமல் பெய்கிறார். அதாவது தம்முடைய ஆசையை மடைமாற்றம் செய்து, இந்த உயர்ந்த பொருளில் செலுத்த முயல்வதை நீ கண்டுகொண்டே இருக்கிறாய்; எனவே இதற்கு உதவவேண்டியது உன்னுடைய கடமை என்பதைத் தம் தலைவனுக்கு நினைவுறுத்துவார்போல ஒவ்வொரு பாடலிலும் கண்டாய்