பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து 35 ஆண்டுகொண்டார் என்ற செய்தியையே இப்பாடலில் அடிகளார் கூறுகிறார். அமைச்சராக இருந்தபொழுது மகளிர் தாக்கத்தை ஏற்றுக்கொண்டு அனுபவித்த அடிகளாரைப் பெருந்துறை நாயகன் மாற்றினான். எவ்வாறு? "வேந்தனாய் வெளிப்பட்டு (570) நின்று அடிகளாரின் கட்புலனுக்கு விருந்தளித்தான். தையலார் அழகைக்காட்டிலும் குருநாதரின் அழகிய வடிவம் கட்புலனுக்குச் சிறந்த விருந்தாயிற்று. 570ஆம் பாடலில் வேந்தனாய் என்முன் நின்றதோர் அற்புதம் என்று பாடிய அடிகளார். அதனை அடுத்து இந்தப் பாடலில் (572) அருந்துணைவனாய் ஆண்டு கொண்டான்' என்று சொல்வது சிந்தனையைத் துரண்டுகிறது. திருவாதவூரராக அமைச்சராக வருகின்ற ஒருவரை வழிமறித்து ஆட்கொள்ளவேண்டுமானால் அவர் வகிக்கும் பதவியைவிட உயர்ந்த பதவியில் இருப்பவராக இருத்தல் வேண்டும். அப்படி உயர்பதவியில் இருந்தாலும் அவனுடைய கட்டளையை அமைச்சராகவுள்ள ஒருவர் ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கவேண்டுமானால் அந்தக் கட்டளையை இடுகின்ற அரசன் திருமந்திரஒலைநாயகம் வழியாக அல்லாமல் அமைச்சரின் எதிரே நின்று கட்டளையைப் பிறப்பிக்க வேண்டும். இந்தக் கருத்துத்தான் சென்ற பாடலில் வேந்தனாய் வெளியே (வெளிப்பட்டு) என்முன் நின்றதோர் அற்புதம் என்று அடிகளாரால் பேசப்பெறுகிறது. உலகியலில் இப்படி எஜமானர் ஆகவும் எஜமானரின் கீழ்ப் பணிபுரிபவராகவும் வாழ்க்கையைத் தொடங்கிய இருவர் தம்தம் பதவிகள் உயர்வுதாழ்வுகள் என்பவற்றை மறந்து ஒருவருக்கு ஒருவர் சமத்துவம் பாராட்டி நெருங்க வேண்டுமானால் அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால், குருநாதரையும் அடிகளாரையும் பொறுத்தமட்டில்