பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 * திருவாசகம் சில சிந்தனைகள் 5 கண்டுகொள்ளுமாறு பணித்து அருள்செய்ததை விரிவாகப் பாடுகிறார். அதுமட்டு மல்ல. அந்தப் பெரியோன் தம்மை ஆட்கொண்டு உன்னைவிட்டு என்றும் பிரியேன்” என்று உணர்த்தியதாகவும் பாடுகிறார். இது பெருந்துறையில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். அதன் பிறகு பல நாட்கள் கழித்துப் பாடப்பெற்ற எண்ணப் பதிகத்தில் பிறப்பற வேண்டும் என்று பாடுவதின் நோக்கம் என்ன? இதன் முன்னர்ப் பல பாடல்களில் தம்முடைய பிறப்பு அற்றுவிட்டது என்றும் பிறப்பை அறுத்துவிட்டான் என்றும் பாடியுள்ளாரே! அப்படியிருக்க, ஏதோ புதிதாக ஒன்றை வேண்டுவதுபோலப் பிறப்பற வேண்டும், பத்திமையும் பெறவேண்டும் என்று பாடுவது பொருந்துமா? அடுத்த பாடலில் (60) தமக்கு அருள் செய்தமையை முழுவதுமாகக் கூறிவிடுகிறார். எனவே, இந்தப் பாடலுக்குப் பொருள் செய்வதில் புதிய கண்ணோட்டம் தேவை என்று தோன்றுகிறது. முன்னர்த் தொகுக்கப்பெற்ற பத்துக்களை மறுபடியும் ஒருமுறை படித்தால் அதிலுள்ள வளர்ச்சிமுறை நம் கவனத்தை ஈர்க்கிறது. திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிதாக வளர்ந்து அருளாளர்கள் வரிசையில் முதல் வரிசையில் இடம்பெற்றுள்ள அடிகளார் பிறப்பற வேண்டும், பத்திமை வேண்டும் என்று பாடினால் வேறு யாரையோ மனத்துட் கொண்டு இவற்றைப் பாடியதாக நினைக்க இடம் உண்டு. நாவரசர் பெருமான் நன்கு வளர்ந்துவிட்ட நிலையில் 'மனிதர்காள் இங்கே வம். ஒன்று சொல்லுகேன் (திருமுறை: 5-917) என்று மனித சமுதாயத்தை அழைத்துப் பாடியதுபோல அடிகளாரும் பாடுகின்றாரோ என்று தோன்றுகிறது. - . . இதற்குப் பின்னர் நான்காவது பாடலில் 602, ‘புத்திலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த