பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை-9-43) பைங்கழல் காணப் பித்திலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பறுப்பாய்’ என்றும் காணும் அது ஒழிந்தேன் நின் திருப்பாதம் கண்டு கண் களி கூரப் பேணும் அது ஒழிந்தேன் பிதற்றுமது ஒழிந்தேன் (603) என்றும் பாடியுள்ளதைக் கூர்ந்து நோக்க வேண்டும். இப்பதிகத்தில் இன்று கிடைத்துள்ள ஆறு பாடல்களின் மூன்று பாடல்களில் முதல் ஒன்றிரண்டு அடிகளில் இவ்வாறு பேசப்பெற்றுள்ளது. சற்று நின்று நிதானித்தால், நீத்தல் விண்ணப்பத்தில் இடம்பெறவேண்டிய கருத்துக்கள் இவை என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படியிருக்க, எண்ணப் பதிகத்தில் இவை இடம்பெற்றுள்ளன என்றால் புதிய சிந்தனையுடன் இதனை நோக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இந்தப் புதிய சிந்தனையின் விரிவான விளக்கத்தை அடுத்துவரும் புதிய திருப்பம்’ என்ற தலைப்பில் காணலாம். இப்போதைக்கு ஒன்றைமட்டும் கூறலாம். எண்ணப் பதிகம் மக்கள் சமுதாயத்தை நோக்கிப் பாடப்பெற்றதாகும். இதிலிருந்து அடிகளாரின் குறிக்கோளில் ஒரு புதிய திருப்பம் தொடங்குகிறது. இதைச் செய்வீர்களாக' என்று உடன்பாட்டு முறையில் ஆணையிட்டால் அதைக் கேட்பவர்கள் மனத்தில் எதிர்மறையான எண்ணந்தான் தோன்றும். இந்த நுணுக்கத்தை அறிந்த அடிகளார். ஏதோ தனக்காக ஒன்றை விரும்பிக் கேட்டுக்கொள்வதுபோலப் பாடியுள்ளமை நோக்கத்தக்கது. இதற்கு அடுத்து வைக்கப்பெற்றுள்ளது அருட்பத்தாகும். மனித மனத்திற்கு ஒரு விந்தையான சுபாவம் உண்டு. எவ்வளவு நிறைவு பெற்றிருந்தாலும், அமைதி நிறைந்திருந்தாலும் யாரோ ஒருவர் மறுபடியும் நம்பிக்கையூட்டி அச்சம் தெளிவிக்க வேண்டும் என்ற