பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_0-433 எளிதில் பொருள் விளங்காத ஒரு திசைச் சொல்லைப் பயன்படுத்தினார். இதனை அடுத்து நாம் வைத்துள்ளது குழைத்த பத்தாகும். இதுவும்கூட மக்கள் சமுதாயத்தை நோக்கிக் கூறியது என்று கொள்ளலாம். இவ்வாறு பிறருக்கு இன்னது செய்யவேண்டும் என்று மறைமுகமாகப் பேசும்பொழுது அடிகளார் கையாளும் முறை ஒன்று உண்டு. மனிதர்களை ஒன்று செய்க என்று வேண்டினால், அதைச் செய்தால் ஏற்படும் பயன் என்ன என்பதை அறிய விரும்புவர். இதனை மனத்திற்கொண்டே அடிகளார் நீங்கள் உரைப்பீர்களானால் அதன் பயன் உடனே கிட்டும் என்ற பொருள்பட ‘உழைத்தால் உறுதி உண்டு என்று பாடுகிறார். இதனைக் கேட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் அவ்வழியிற் செல்லும்பொழுது விரும்பியோ விரும்பாமலோ, அறிந்தோ அறியாமலோ பிழைகள் பல செய்யக்கூடும். அதனால் மனம் கலங்கத் தேவையில்லை என்பதை அறிவுறுத்தவே 'பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ (495) என்ற தொடரை வைக்கின்றார். இறைவனைப் பார்த்து 'உமையாள் கணவன்’ என்று விளித்ததால், பிழைபொறுக்கும் தாயின் பங்கினன் என்பதை அவனுக்கு நினைவூட்டி, உயிர்களின் பிழைகளை நீ பொறுக்க வேண்டும்’ என்று கூறுகிறார். இப்பதிகத்தின் இரண்டாவது பாடல் (497 மனித வாழ்வில் தோன்றும் ஒரு சிக்கலை அறிவுறுத்துகிறது. பல நாள் துன்பமுற்ற ஒருவன் திடீரென்று துன்பம் நீங்கிய பொழுது பெருமகிழ்ச்சி அடைகின்றான். இனி, தனக்குத் துன்பமே வராது என்று நினைக்கின்றான். இந்த விடுதலை நிரந்தரமானது என்று மகிழ்கின்றான். ஆனால், வினைச் சுழற்சியில் அகப்பட்டவனுக்கு நன்மை தீமை என்ற இரண்டும் மாறி மாறி வருமன்றே? அதனைச் சிந்திக்காமல்