பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 திருவாசகம் சில சிந்தனைகள்-5 நிரந்தரமான விடுதலை உண்டு என்று நினைத்து மகிழ்ந்தவனுக்கு இந்த மாற்றம் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அந்த மனநிலைதான் முதல் அடியில் பேசப் பெறுகிறது. ‘அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன்’ என்று கூறிவிட்டு, மூன்றாவது அடியில் செடிசேர் உடலைச் சிதையாதது எத்துக்கு என்று கேட்பது நம் மனநிலையைப் பிரதிபலிப்பதாகும். முன்னர்க் கூறியபடி துன்பம் எல்லாம் அகன்றுவிட்டது என்ற நினைவில் மகிழும்பொழுது மறுபடியும் துன்பம் நேர்ந்தால் சீ! இது என்ன வாழ்க்கை, இந்த வாழ்க்கையை விட்டுப் போய்விட்டால்கூடப் போதுமே” என்ற நினைவுதான் பலருடைய மனத்தில் தோன்றும். அதனையே அடிகளார். இப்பாடலில் பிரதிபலிக்கின்றார். இந்த உடல் இருந்ததால்தான் திருவாசகம் பாடமுடிந்தது; கணக்கிலாக் கோலத்தைக் காண முடிந்தது. அப்படியிருக்க, உடலம் சிதையாதது எத்துக்கு என்று பாடினால், அது நம்முடைய எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகத்தான் தோன்றுகிறது. இந்தப் பத்தில் மனிதர்களுக்கு மற்றும் ஒரு புதிய வழியைக் காட்டித் தென்பு சேர்க்கிறார். நம்பொருட்டாக அவரே இறைவனிடத்து ஒரு வினாவைக் கேட்கின்றார். ‘குன்றே அனைய குற்றங்கள் குணமாம் என்றே நீ கொண்டால் என்தான் கெட்டது (498) என்று கேட்கும் பொழுது, அந்த வினா குற்றமே செய்யாத மணிவாசகர் தமக்காகக் கேட்கும் வினாவன்று; குற்றத்திலேயே பிறந்து உழலும் நம்பொருட்டாக அவர் கேட்ட வினா என்று கொள்ள வேண்டும். நம் பொருட்டாக இறைவனிடம் மன்றாடிய அடிகளார் இறுதியாக, தாம் மேற்கொண்ட வழியை விரிவாக எடுத்துரைக்கின்றார். 'அன்றே’ என்று தொடங்கும் பாடலில் (502) ஆவி, உடல், உடைமை என்ற மூன்றும் உன்பால் அளித்துவிட்டேன் ஆதலின் நீ நல்லது