பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_435 செய்தாலும் கெட்டது செய்தாலும் அதற்குத் தலைவன் நானல்லன். எனவே, அதுபற்றிக் கவலை எப்போதும் இல்லை என்ற முழுச் சரணாகதித் தத்துவத்தை இப்பாடலில் விளக்கமாக எடுத்துரைக்கிறார். விருப்பு வெறுப்புக்களை நீக்கி, உறுதிப்பாட்டுடன் வாழத் தொடங்குவோர்க்குக்கூடக் சரணாகதி என்பது முழுத்தன்மை பெறாமல் இருக்கும்வரை ஓர் அச்சம் மனத்தின் அடித் தளத்தில் இருந்துகொண்டேதான் இருக்கும். அதுதான் சாவைப்பற்றிய அச்சம். ஆகவே சரணாகதித் தத்துவத்தை 562ஆம் பாடலில் பாடியவர் 503ஆவது பாடலில் இப்பிறவியும் உன்வசம்; அது வைத்திருக்கும் பொறுப்புத்தான் என்னுடையது என்று கூறுகிறார். 'காயத்திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய்; எது செய்தாலும் அதுபற்றி எனக்குக் கவலை இல்லை என்று மனித ஆன்மாவின் இறுதியான குறிக்கோள் எதுவாக இருத்தல் வேண்டும் என்பதை 502, 503ஆம் பாடல்களில் எடுத்து விளக்கியுள்ளார். எவ்வளவுதான் சரணமாகக் கொடுத்தாலும் இந்த உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும்வரை வேண்டும் என்ற ஆசை மனத்தில் இருக்கத்தான் செய்யும். அறவே பற்றைத் துறந்தவர் கூட அப்பற்றை இறைவன் திருவடியில் வைக்கின்றனர். இதுகருதிய வள்ளுவப் பேராசான் பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (குறள் 350) என்று பாடியுள்ளார். இது சற்றுக் கடினமான வழியாகும். 'குழந்தைக்கு என்ன வேண்டும்’ என்பதைத் தாய் அறிந்து கொடுப்பதுபோல உயிர்களுக்குத் தாயாகிய இறைவன், உயிர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறியமாட்டானா? தாயாக உள்ளவன் அறிந்து தருவான் என்ற எண்ணம் வலுப்பெற்றால் வாழ்வு சிறப்படையும் என்பதைக் கூறவந்த அடிகளார் வேண்டத்தக்கது