பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 திருவாசகம் சில சிந்தனைகள்-5 அறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ (50) என்று பாடுகிறார். குழைத்த பத்துப் பதிகம் முழுவதும் அடிகளார் இறைவனடி சேர்வதற்குச் சில காலம் முன்னர் இந்த மக்கட் சமுதாயத்திற்காகப் பாடியதாகும். நம்பிக்கையூட்ட வேண்டும்; அமைதியாக வாழச் செய்ய வேண்டும்; குறிக்கோளோடு வாழக் கற்றுதர வேண்டும்; இறுதியாக வீடுபேற்றை அடையும் வழியையும் காட்டவேண்டும் என்று கருதிய அடிகளார். இவை அனைத்தையும் பத்தே பாடல்களில் மருந்துறைபோல (Capsule) குழைத்தபத்தில் பெய்து தந்துள்ளமைக்கு மனித சமுதாயம் என்றும் கடப்பாடுடையதாகும். திருவாசகம் முழுவதையும் பயில நேரமில்லாதவர்கள், பொருள்பற்றிக் கவலைப்படாமல் தினம் பாராயணம் செய்துவிட்டு மகிழ்ச்சியடைவோர்கள் ஆகியோர் குழைத்த பத்து ஒன்றைமட்டும் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து படிப்பார்களேயானால் வாழ்க்கையின் L!!L!@J}óôĪ எய்துவர். இங்குப் 'பொருளுணர்ந்து என்று சொல்லியது வெறும் சொற் பொருளையன்று; அது குறிக்கும் குறிப்புப் பொருளையுமாம். இப்பகுதியில் கடைசியாக வைத்திருப்பது பண்டாய நான்மறை என்பதாகும். இதிலுள்ள ஏழு பாடல்களும் வெண்பாக்களாக அமைந்துள்ளன. வீடுபேற்றை அடையப் போகும் அடிகளார் தம்முடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார். திருவாதவூரராக இருந்த தாம் ஒரே பிறப்பில், மணிவாசகராக மாறிய விந்தையைப் பின்நோக்கிப் பார்க்கிறார். நான்மறையும் நான்முகனும் காணாத அத்திருவடிகள் தம்மைத் தேடிப் பிடித்து ஆட்கொண்டதை நினைத்தவுடன் இவ்வளவு பெரிய உபகாரம் செய்தவனுக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும் என்று சிந்திக்கிறார். செய்த உபகாரத்திற்குக் குறிப்பிட்ட கைம்மாறு செய்தாக வேண்டும் என்றிருந்தால் அந்தக் கைம்மாறு செய்ய