பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை-437 முடியாதவர்கள் அந்த உபகாரமே வேண்டாம் என்று இருந்துவிடுவார்கள். அத்தகைய நிலை இங்கு இல்லை என்பதை வலியுறுத்தவே அவன் செய்யும் உபகாரத்திற்கு கைம்மாறு இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக 'நெஞ்சமே! கோகழி எம் கோமாற்கு உண்டாமோ கைம்மாறு உரை (628) என்று கூறுகிறார். ‘மனித சமுதாயமே, உனக்கொன்று சொல்கிறேன். உள்ள மலம் மூன்றும் மாயப் பிறவிக்காடு கருவும்கெட வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்’ என்று இறுதியாக மனித சமுதாயம் முழுவதற்கும் ஒரு பெருநம்பிக்கையைத் தந்துள்ளார் அடிகளார். அதனாலேயே பண்டாய நான்மறை என்ற பகுதியை இத்தொகுப்பின் கடைசியில் அமைத்துள்ளோம். XIII. புதிய திருப்பம் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பதிகங்கள் பின்வருமாறு: 1 யாத்திரைப் பத்து (45) 2. திருப்படையெழுச்சி (46) 3. சிவபுராணம் () 4. அச்சோப்பதிகம் (5) புதிதாக அமைத்துள்ள வைப்புமுறையில் புதிய திருப்பம் என்பது இறுதியாக அமைக்கப்பெற்றுள்ளது. ஒரு திசையில் செல்பவர்கள் அத்திசையைவிட்டு மற்றொரு திசையில் செல்லத் தொடங்குவதைத் திருப்பம் என்கிறோம். திருப்பம் என்ற சொல் திசைமாற்றத்தைக் குறிக்குமே தவிர, சென்ற வழியில் திருப்பிவருதலைக் குறிக்காது. நாளா வட்டத்தில் திரும்பிவிட்டார் என்ற