பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 திருவாசகம் சில சிந்தனைகள்-5 சொல்லின் மூலம் பழைய இடத்திற்கு வருதலைக் குறிக்கத் தொடங்கினர். இங்குப் புதிய திருப்பம் என்று நாம் கூறுவது திருவாசக வளர்ச்சி முறையில் இதுவரையில் காணப்பெறாத புதிய வழி ஒன்றில் பாடல்கள் செல்வதையே குறிக்கின்றது. திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு, அடிகளார் வாழ்க்கை எவ்வித மாறுதலும் இன்றி ஒரே திசையில்தான் சென்றது. குருநாதரையும் அடியார்களையும் மீட்டும் காண வேண்டும் என்ற மிகு அவா ஒருபுறம்; எவ்வித நற்குணங்களோ நற்பண்புகளோ பக்தி ஈடுபாடோ இல்லாத நாய்போன்ற தம்மையும் குருநாதர் ஆட்கொண்டார் என்ற எண்ணம் ஒருபுறம். அம்மட்டோடில்லை; திருவடி தீட்சை செய்து தம்முடைய பரு உடம்பில் அமுத தாரைகளை எற்புத்தொளைதொறும் ஏற்றிப் புதிய உடம்பாகச் செய்துவிட்டார் என்ற எண்ணம் ஒருபுறம் என்ற முறையில் இந்த எண்ணஓட்டங்களின் இடைப்பட்டு, அவற்றின் பயனாகத் திருவாசகம் வெளிவரலாயிற்று. திருவடி தீட்சை பெற்றதால், அடிகளாரின் ஆன்மா எல்லையற்ற தென்புடன் புதிய மாற்றம் பெற்றது. அமுததாரைகள் ஏற்றப்பெற்றதால் திருவாதவூரரரின் பழைய உடம்பு புதிய உடம்பாக மாறிற்று. உடம்பே புது வடிவெடுத்ததென்றால், அந்த உடம்போடு தொடர்புடைய பொறி, புலன்கள், அந்தக்கரணங்கள் ஆகிய அனைத்தும் புது வடிவெடுத்தன என்பது பெற்றாம். எனவே, திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு, மணிவாசகர் என்ற புத்தம் புதிய மனிதர் வெளிப்படுகிறார். இதிலும் ஒரு தனிச் சிறப்புண்டு. முற்றிலும் புது மனிதராக வடிவெடுத்தாலும் தம்முடைய பழைய வாழ்க்கையை, பழைய பழக்க வழக்கங்களை, ஒரோவழி நினைவிற்குக் கொண்டுவரும் ஆற்றலும் அவர்பால் இருந்தது. இது சற்று வியப்பானதேயாகும். அந்தக்கரணங்கள் உள்பட முற்றிலும் புதிய மனிதராக