பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_439 வடிவெடுத்த ஒருவருக்குப் பழமை எப்படி நினைவுக்கு வந்தது? அப்படியே வந்தாலும் பழமையில் நடந்த நிகழ்ச்சிகள் எவ்வாறு நினைவுக்கு வந்தன? இதுபற்றிச் சிந்திக்கும்பொழுது என் மனத்தில் தோன்றிய சிந்தனையைப் பெய்துள்ளேன். அறுநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களையுடைய திருவாசகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மகளிர் தொடர்பால் தாம் பட்ட அவதிகளைக் குறிப்பிடு கின்றார். இது ஏன் என்ற வினாவைப் பலமுறை என்னுள் எழுப்பியபொழுது தோன்றிய சிந்தனை ஒன்றுண்டு. எந்த ஒன்றும் நமக்குப் பயன்படவேண்டுமானால் நமக்கும் அதற்கும் ஒரு தொடர்பு அல்லது பொதுத்தன்மை இருத்தல் வேண்டும். சுவை ஒன்று நம்மை ஈடுபடுத்து கின்றது என்றால், அந்தச் சுவைதரு பொருளும் அந்தச் சுவையை உணரும் நாப் புலனின் அப்பகுதியும் நன்றாக இருத்தல் வேண்டும். அப்பகுதி கெட்டுவிட்டால் அச்சுவையை நாம் அறியமுடியாது. மக்களுக்காகவே திருவாசகம் இயற்றப்படவேண்டும் என்று கருதினான் தில்லைக்கூத்தன். கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்து, எல்லோருக்கும் எல்லாக் காலத்தும் பயன்படக் கூடியதாய் மக்கள் உள்ளத்தைப் பற்றி ஈர்த்துத் தன்பால் நிலைபெறச் செய்யும் ஆற்றலையுடைய பாடல்கள்கொண்டு திருவாசகம் அமைய வேண்டும் என்று கருதினான் தில்லைக்கூத்தன். முன்னியது முடிக்கும் அப்பெருமான் இக்கருத்தை நிறைவேற்றவே திருவாதவூரரைப் படைத்தான். மாபெருங் கல்வியாளராக அவரைச் செய்தான்; மாபெரும் கவிஞராக வும் அவரை ஆக்கினான். மக்கள் சமுதாயத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் தொடங்கி, மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்வரை அனைவருடைய மனநிலை யையும் அறிந்துகொள்ள, ஒரு வாய்ப்பாக அமைச்சர் பதவியில் திருவாதவூரரை இருக்குமாறு செய்தான்.