பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 -திருவாசகம் சில சிந்தனைகள்-5 இவற்றிலெல்லாம் ஒரு குறிப்பிட்ட நிலையைத் திருவாதவூரர் அடைந்தவுடன் அவரை இழுத்து, ஆட்கொண்டு, புதிய தொரு பிறவியைத் தந்தான். புதிய பிறவி எடுக்கும்பொழுது பழைய பிறவி முற்றிலும் மறக்கப்படும். இதுவே இயற்கையின் நியதி. இதற்கு மாறாக, பழமையை ஒரோவழி நினைக்கும் புதிய பிறவியை அடிகளாருக்குத் தந்தான் கூத்தன். இந்தப் பழமை நினைவு ஒரளவு பெரிதாக வளர்ந்து, அவருடைய புதிய பிறவியை ஒரோவழி மறக்கச் செய்தது. இதன் பயனாக இந்த உடம்பையே ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் எதிர்பாராமல் அடிகளார் மனத்தில் தோன்றி வளரத் தொடங்கிவிட்டது. கண்ட பத்துப் பதிகம் முழுவதிலும் இந்த உடம்பு ஒழிய வேண்டும் என்று பாடத் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் அவருடைய எண்ணப்போக்கை மாற்றி, திருவாதவூரராக கருவில் இருக்கும்பொழுதே நிகழ்ந்தவற்றைக் காணுமாறு செய்தான். இந்தப் பின்னோக்குப் பார்வை சில விநாடிகள்தான் நீடித்தது. அந்தக் கணத்தில் தோன்றிய ஒரு பாடல் உருத் தெரியாக் காலத்தே (477) என்பதாம். கண்டபத்துப் பதிகத் தின் இப்பாடலுக்கு முன்னும் பின்னும் இழிநிலையை நினைந்து வருந்தும் அடிகளாரே காட்சியளிக்கிறார். ஆட்கொள்ளப்பெற்று இறையனுபவத்தில் மூழ்கித் திளைத்து இறைப் பிரேமையில் துளையமாடும் அடிகளா ருக்குப் பழைய வாழ்க்கையில் மகளிர் தொடர்பு என்ற ஒன்றுமட்டும் ஏன் நினைவுக்கு வரவேண்டும்? பல பாடல்களில் ஏன் அதனை விரித்துப் பாடவேண்டும்? ஏனையோரைப் போல இந்தப் பழைய நினைவுகள் அடிகளாரைக் கீழே இழுத்துவிட்டனவா? அவருடைய வளர்ச்சியைத் தடைசெய்துவிட்டனவா என்றால், இல்லவே இல்லை என்று உறுதியாகக் கூறலாம். அப்படியானால், முற்றிலும் புதியவராக வடிவெடுத்த அடிகளாரின்