பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை-44, உள்ளத்தில் இந்த எண்ணங்களைப் புகுத்தி, அவற்றைப் பாட்டாக மலரச்செய்தது எது? தில்லைக்கூத்தன் திருவருள்தான் அது. ஏன் தெரியுமா? மனிதர்கள் எந்த வயதிலும் பாலுணர்விலிருந்து முற்றிலும் விடுபடுதல் இயலாத காரியம். அதனால் ஆன்மிகத்தில் முன்னேற முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுவோர்களுக்கு ஒரு மனத்தென்பை ஊட்டக் கருதினான் தில்லைக்கூத்தன். அஞ்சவேண்டா, இந்த உணர்வுகள் எவ்வளவு உன்னைப் பற்றிநின்றாலும், என்னைப் பற்றவேண்டு மென்ற உறுதிப்பாட்டுடன் உன் ஆன்மிக யாத்திரையைத் தொடங்கினால் என் திருவருள், தோன்றாத் துணையாக நின்று உன்னைக் கைதுரக்கிவிடும்’ என்று மானிட சாதிக்கு அறிவுறுத்த விரும்பினான் கூத்தன். இதனை அறிவுறுத்தவே அடிகளாரைக் கருவியாகக் கொண்டான். இப்பாடல்களைப் படிப்பவர்கள் இப்படியெல்லாம் இருந்தும் ஒரே பிறவியில் அடிகளார் முன்னேறினார் என்பதைப் படிக்கும்பொழுது அவர்கள் உள்ளத்தில் அச்ச உணர்வு நீங்கி, ஒரு புதிய நம்பிக்கை ஒளிவிடும். மானிட சாதிக்கு இந்த நம்பிக்கையை ஊட்ட, கூத்தன் கையாண்ட வழிமுறை ஆகும் இது. திருவடி ஒன்றை மட்டும் கண்டு, சிவன் எனத் தேறிய ஒருவர். 'கண்ணால் யானும் கண்டேன் காண்க என்று அழுத்தம் திருத்தமாகப் பாடிய ஒருவர்.தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை என்று பாடும் ஒருவர். 'உன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்' என்று பாடிய ஒருவர். "உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்’ என்று பாடும் அளவுக்கு நெஞ்சு உரம் பெற்ற ஒருவர், இடைஇடையே "வெஞ்சேல் அனைய கண்ணார்தம் வெகுளி வலையில் அகப்பட்டு நைஞ்சேன் என்பதுே பான்ற பாடல்களைப் பாடுவாரேயானால்,