பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை-3-443 அடிகளார். நாயிற் கடையேன்” என்று பாடிக்கொள்ளும் நிலை மாறிவிட்டது. தொடுதுரத்தில் உள்ள திருவடியை நோக்கிச் செல்லத் தயாராகிவிட்ட நிலையில், கடல்போல் விரிந்து கிடக்கும் மனித சமுதாயம் அவர் கண்ணில் படுகிறது. எத்தனை வகை மனிதர்கள்! ஒருசிலர், செல்லும் முயற்சியில் இரண்டொரு தப்படிகள் எடுத்து வைத்துள்ளனர். ஒருசிலர் அடிகளாரோடு செல்வதற்குச் சித்தமாகி உள்ளனர். அவர்களுக்குப் பின்னர் உள்ள சிலர் போகலாமா, வேண்டாவா’ என்ற ஆராய்ச்சியில் இன்னும் ஒரு முடிவிற்கும் வரவில்லை. இவற்றையெல்லாம் பார்த்த அடிகளார் யாத்திரைப் பத்தைப் பாடுகிறார். 'உடையான் கழல்புகக் காலம் வந்தது காண் பொய் விட்டுப் போவோம்’ (605) என்ற தொடர் முதற்பாடலின் இறுதியில் இடம்பெறுகிறது. போவோம்’ என்ற தன்மைப் பன்மை இப்போது உலகத்தை நோக்கி அடிகளார் பேசுகிறார் என்பதை அறிவிக்கின்றது. இதனை அடுத்துவரும் மூன்று பாடல்கள் (600-608) புறப்படுவதற்கு இரண்டு தப்படிகள் எடுத்து வைத்துவிட்டவர்களுக்குக்கூடப் புதிய தடைகள் காத்துக்கொண்டிருக்கின்றன என்பதை அறிவிக்கின்றன. அவர்களுடைய பொறி புலன்கள் அவர்களைப் பின்னுக்கு இழுக்கின்றன. அந்தத் தொகுதியினரை நோக்கி, புகவே வேண்டா புலன்களில்’ என்று கூறுகிறார். அவன் பூங்கழல்கள் மிகவே நினைமின், மிக்கவெல்லாம் வேண்டா போகவிடுமின்’ என்ற அறிவுரையைத் தருவதன் மூலம் தடைகளை சந்திப்பவர்களுக்கு அவற்றை வெல்லும் வழியென்ன என்றும் கூறுகிறார். போகலாமா வேண்டாமா என்ற முடிவு செய்யாதவரை நோக்கி நிற்பார் நிற்க, நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோம்’ என்று கூறுகிறார். அத்தோடு அமையாமல், இரண்டாட்டத்திற்கு இடம்