பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 திருவாசகம் சில சிந்தனைகள்-5 கொடாமல் இரண்டுள், ஏதோ ஒரு முடிவை உடனே எடுக்க வேண்டும் என்ற கருத்தை நிற்பீர் எல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் ' (611) என்ற தொட்ரால் குறிப்பிடுகிறார். வாழ்க்கை முழுவதும் செய்யலாமா, வேண்டாவா என்ற இரண்டாட்டத்தில் வாழ்வையே போக்கிக்கொள்ளும் மனித சமுதாயத்திற்குக் கூறப்பெற்ற நல்லுரையாகும் இது. இவ்வாறு கூறியபிறகு அடிகளாரின் மனம் சஞ்சலமடைகிறது. இப்படிக் கூறிவிட்டோமே, இவர்கள் இங்கு இருப்பதே சுகம், புறப்படவேண்டா என்ற முடிவிற்கு வந்துவிட்டால், இவர்கள் வாழ்வு அவமாகி விடுமே என்று வருந்திய அடிகளார் நின்றுவிடுவது' என்ற முடிவுக்கு வந்துவிட்ட அத்தொகுதியினரை நோக்கி இறுதியாக ஓர் எச்சரிக்கை தருகிறேன்; அதன் பிறகு முடிவெடுங்கள் என்று கூறுகிறார். இன்று புறப்படாமல் நின்றுவிட்டு, பிறகு உங்கள் தவற்றை நினைந்து எவ்வளவு அழுதாலும் அது கிடைக்காது’ என்று கூறுவார்போல, பிற்பால் நின்று பேழ் கணித்தால், பெறுதற்கரியன் பெருமானே’ (61) என்று கூறிமுடிக்கிறார். திருவாசகம் முழுவதிலும் காணப்பெறாத புதிய திருப்பமாகும் இது. தாம் போவது உறுதி என்ற முடிவுக்கு வந்தபிறகு உயிர்கள்மாட்டுக் கொண்ட பெருங் கருணையால் பாடப்பெற்ற பகுதியாகும் இது. ‘போவோம் காலம் வந்ததுகாண் (605) என்பதில் ‘போவோம்’ என்று கூறிவிட்டமையின் யார் யார் போவது, எப்படிப் போவது, எங்கே போவது என்ற வினாக்கள் எழுமன்றோ இந்த வினாக்களில் எங்கே போவது என்ற வினாவுக்கு 'உடையான் கழல்புக’ என்பதில் விடை கிடைத்துவிட்டது. எஞ்சிய இரண்டு வினாக்களாகிய யார் யார் போவது, எப்படிப் போவது என்ற வினாக்களுக்கு விடை கூறுவதுதான் திருப்படை எழுச்சி என்ற பதிகம்.