பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை 445 உலக வாழ்க்கையில் ஒரூரிலிருந்து மற்றோர் ஊருக்குப் பயணம் செல்வது என்றால், எத்தனையோ முன்னேற்பாடுகள் செய்யவேண்டியுள்ளன. அப்படியிருக்க, வான நாடு ஆளப் போகும் நமக்குப் பல முன்னேற்பாடுகளும் துணையும் தேவைப்படுகின்றன. புறப்படுவோம்’ என்று யாத்திரைப் பத்தில் கூறிய அடிகளார், தம்மோடு புறப்பட்டுவிட்ட மக்களுக்கு எவ்வித ஊறும் நேராமல் சிவபுரத்திற்கு அழைத்துச் செல்ல, ஒரு படையையே அணிவகுக்கின்றார். அமைச்சராக இருந்து படை நடாத்திய அனுபவம் அடிகளாருக்கு இங்குக் கை கொடுக்கின்றது. திருப்படை எழுச்சியில் உள்ள இரண்டு பாடல்களும் வான நாடு ஆளப் புறப்பட்டவர்களுக்கு எவ்வித இடையூறும் வாராமல் காத்துச் செல்லும் அடியார் படையைப் பற்றியதாகும். - இத்தொகுப்பில் மூன்றாவதாக இடம்பெறுவது சிவ புராணம் ஆகும். இன்று பதிக்கப்பெற்றுள்ள முறையில் திருவாசகத்தைப் பயின்றவர்களுக்கு முதலில் உள்ள சிவ புராணத்தை இங்கே கொண்டுவைப்பது என்னவோபோல் தோன்றலாம். ஆழ்ந்து சிந்தித்தால் திருப்பெருந்துறை நிகழ்ச்சியின்பின் பல காலம் கழிந்தபின்னர், பல அனுபவங்களைப் பெற்றபின்னர், இறையனுபவத்தில் பலமுறை தோய்ந்து எழுந்தபின்னர், இறுதிக் காலத்தில் 'இதோ திருவடியைச் சேரப் போகிறோம், அதற்குரிய காலம் வந்துவிட்டது என்ற நினைவு தோன்றிற்று. இந்த நிலையில் யாத்திரைப் பத்தும், திருப்படையெழுச்சியும் பாடியாயிற்று; இது முதிர்ந்த நிலை. நாயிற் கடையாய்க் கிடந்த அடியேன்” என்று தம்மைப்பற்றிப் பேசும் நிலை இங்கே இல்லை. உலக மக்களுக்கு அறிவுரை கூறுவதும், அவர்கள் குறிக்கோள் எதுவாக இருக்க வேண்டும் என்பதும் யாத்திரைப் பத்திலும் படையெழுச்சியிலும் கூறப்பெற்றுவிட்டன.