பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_47 அடிகளாரின் உள்ளே புகுந்தவன் அடிகளார் திருவாயைக் கருவியாகக் கொண்டு கூறுகிறான். சிந்தை மகிழ’ என்பதில் ஒரு சிக்கல், மகிழ்ச்சி என்ற சொல் மனத்தோடு தொடர்புடையது. மனமகிழ்ச்சி, உள்ளக் களிப்பு, சிந்தையில் ஆனந்தம் என்று பிரித்துக் கண்டால் இது விளங்கும். சிந்தையில் தோன்றுவது ஆனந்தமே தவிர மகிழ்ச்சியன்று. பாடலில் மகிழ’ என்று வந்தாலும், ஆனந்தம் என்ற பொருளையே இங்குக் கொள்ள வேண்டும். - மணிவாசகரின் திருவாயைக் கருவியாகக் கொண்டு, சிவபுராணத்தைச் செய்தவன் மேலும் இரண்டைக் கூறுகிறான். ஏன் சிவபுராணத்தைக் கூறினான்? உயிர்களி னுடைய பழவினைகள் அனைத்தும் ஒயும்படியாக இதனைக் கூறினான். சிவபுராணத்தைக் கற்பவர் வினைமுழுதும் ஒயவேண்டு மேயானால் அதனை மனத்துள் படித்தோ, வாய்விட்டுக் கூறியோ, பஜனை செய்தோ பயனில்லை. பாடலில் வரும் தொடர்களுக்கு எழுவாய், பயனிலை என்ற இலக்கணக் குறிப்புகளும், பதவுரை, பொழிப்புரை என்ற விளக்கங்களும் எவ்விதப் பயனையும் தாரா. இவற்றை விரித்துக் கூறவேண்டிய இடத்தில் விரித்துக் கூறாமைக்குக் காரணம் அடிகளார். இதனைப் பாடாமைதான். எனவே, பாடியவன் விளக்கமாகக் கூறாமல், ஒரே ஒரு சொல்லின்மூலம் இத்தனை விளக்கத்தையும் தந்துவிடுகிறான். சொல்லிய பாட்டின் பொருள் அறிந்து அல்லது தெரிந்து அல்லது விளங்கிக்கொண்டு என்றெல்லாம் கூறவில்லை. அவற்றிற்குப் பதிலாகப் பொருள் 'உணர்ந்க’ சொல்லுவார் (193) என்று கூறினான். அதாவது, சொற்களுக்கு அப்பால் இருக்கின்ற பொருளை அறிவுகொண்டு ஆராயாமல் உணர்வுகொண்டு உணர முற்படவேண்டும். அப்படி உணர்ந்த நிலையில்