பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 திருவாசகம் சில சிந்தனைகள்-5 சிவபுராணத்தை ஒருமுறை சொன்னால் அவர்கள் சிவபுரம் சென்று அங்கேயே இருப்பர். இறுதியடியில் 'பணிந்து' என்று ஒருசொல் இருப்பதைக் காணலாம். இச்சொல்லை இறுதியாக வைத்ததில் ஒரு நோக்கம் உண்டு. பாட்டின் சொற்பொருளை அறிந்து தெரிந்த பின்னர் உணரத் தொடங்கினால் சிந்தையில் ஆனந்தம் தோன்றும். இது ஒரு ஆபத்தான கட்டம். நான் இந்த ஆனந்தத்தைப் பெற்றுவிட்டேன் என்ற நினைவு தோன்றுமேயானால் ஆனந்தம் போய்விடும். இந்த நிலையில் நான் அடங்கிய பணிவு வேண்டும் என்பதைக் குறிப்பதற்காகவே பணிந்து என்ற சொல் இறுதியில் வைக்கப்பெற்றுள்ளது. யாத்திரைப் பத்து, திருப்படையெழுச்சி என்ற இரண்டும் அனுபவ முதிர்வில் திருவடி தொடுதுாரத்தில் இருக்கும்பொழுது அடிகளார் பாடினார் என்று முன்னரே விளக்கியுள்ளோம். அவருடைய வாழ்க்கை முழுவதும் அடைந்த வளர்ச்சி காரணமாக மனித சமுதாயத்திற்கு உய்கதி காட்டும் ஒரு பகுதியைப் பாடவேண்டும் என்று அடிகளார் நினைத்திருக்கலாம். சிவபுராணத்தை அவரே பாடியிருப்பின் முழு வளர்ச்சி பெற்ற ஈடுஇணையற்ற ஒர் அருளாளரின் பாடல்தான் இது என்று பலரும் கருதிவிடக்கூடும். அந்நிலை நேராமல் இருக்கவே தில்லைக்கூத்தன் அடிகளாரைக் கருவியாகக் கொண்டு, உயிர்களின் சிந்தை ஆனந்தமடைய அவனே சிவபுராணத்தைக் கூறிவிட்டான். - அடிகளாரே இதனைப் பாடியிருந்தால் 'முந்தை வினை முழுதும் ஒய உரைப்பன் யான்’ என்று பாடியிருக்க மாட்டார். நான் ஆர் என் உள்ளம் ஆர்’ என்பதிலும் 'நானேயோ தவம் செய்தேன்’ என்பதிலும் வரும் நான்' வேறு; உரைப்பன் யான் என்பதில் வரும் நான் வேறு.