பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை 449 இறுதியாக இத்தொகுப்பில் வைக்கப்பெற்றுள்ளது அச்சோப்பதிகம் ஆகும். இப்பதிகம் முழுவதிலும் முற்பகுதியில் தாம் இருந்த பழைய நிலையை எடுத்துக்காட்டி, இப்படிப்பட்ட தமக்குக்கூட அத்தன் அருளினான் என்று பாடுகிறார். இப்பதிகத்தில் வரும் ஆர் பெறுவார்’ என்பது கவனித்துப் பொருள்கொள்ள வேண்டிய ஒரு தொடராகும். எனக்குக் கிடைத்த இப்பேற்றை என்னைத் தவிர வேறு யார் பெறுவார் என்று கூறிவிட்டால் அனைத்தும் கெட்டுவிடும். பாடல்களின் முற்பகுதியில் தம் இழிநிலையைக் கூறி, இப்படிப்பட்ட தம்மைக்கூடச் சிவமாக்கி ஆட்கொண்டான். என்றால், யார்தான் இதனைப் பெறமுடியாது என்ற. கருத்தில், யாரும் பெறுவார் என்றுதான் பாடியிருக்க வேண்டும். யாரும் பெறுவார் என்பதிலுள்ள உம்மை தொக்கி நின்றது. எனவேதான் யார்பெறுவார் அச்சோவே' என்று பாடல் முடிகிறது. நம்பிக்கை இழந்து அல்லலுறும் மானிட சாதிக்கு நம்பிக்கையூட்டும் வகையில், தமக்கேகூட இது கிடைத்தது என்றால், யார்தான் இதனைப் பெற முடியாது என்ற கருத்தில் அமைந்துள்ள இப்பதிகம், இத்தொகுப்பின் இறுதியில் வைக்கப்பெற்றுள்ளது சாலப் பொருத்தமே என்று தோன்றுகிறது. வேர்ட்ஸ் வெர்த் (Wordsworth) என்ற ஆங்கிலக் கவிஞன் எழுதிய பிறிலுரடு (Prelude) என்ற கவிதையைப் பற்றிப் பேசவந்த திறனாய்வாளர்கள், இந்த ஒரு கவிதையிலேயே அக்கவிஞனுடைய வளர்ச்சி முறையையும் முழு வளர்ச்சியையும் அறிய முடிகிறது என்பர். கம்பநாடனுடைய l_jff GÜ காண்டத்திற்கும் யுத்த காண்டத்திற்கும் இடைப்பட்ட பகுதிகள் அவனுடைய வளர்ச்சியை அறிய உதவுகின்றன என்றும் கூறுவர்.