பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து 37 செய்கின்றது. சேவடிச் சிலம்பு அவை சிலம்பிட என்ற தொடரின் பொருள் இதுவேயாகும். இந்தச் சிலம்பு ஒலி தமக்கு வழிகாட்டுபவனுடைய சிலம்பு ஒலி என்று அறிந்து கொண்டதும் சிலம்பொலிக்கு உரியவன் அருந்துணைவன்’ என்று பேசப்பெறுகிறான். தையலார் வளையொலி மனத்தைமட்டும் கவர்ந்து அவர்கள்பால் ' ஈர்த்தது. ஆனால் தில்லைக்கூத்தனின் திருவடிச் சிலம்பொலி மனம் முதலிய அந்தக்கரணங்கள் நான்கையும், உயிரையும் சேர்த்தல்லவா ஈர்த்தது! அதனையே அடிகளார் திருந்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிட' என்று பாடுகிறார். 573. மாடும் சுற்றமும் மற்று உள போகமும் மங்கையர் தம்மோடும் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்து என் தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர்க் கழல் காட்டி ஆடுவித்து எனது ஆதம் புகுந்து ஆண்டது ஒர் அற்புதம் அறியேனே மாடு, (செல்வம்) சுற்றம், மற்றுள போகம் என்பவற்றோடு அல்லாமல், இவற்றை அடிப்படையாகக் கொண்டு மங்கையர் தம்மோடும் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை' என்று கூறியது திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு முற்பட்ட அமைச்சர்கால வாழ்வில் நடைபெற்றவை என்க. இவ்வாறு இருந்த அவரை அவன் இப்பொழுது என்ன செய்தான் தெரியுமா? மென்மலர்க் கழல் காட்டினான், மகளிரின் கால்களையே கண்டுகொண்டிருந்த அவரை அவன் திருவடிகளைக் காணுமாறு செய்தான். சில விநாடிநேரம் அந்த மகளிர் தந்த இன்பத்திற்குப் பதிலாக வீட்டை அல்லவா தந்தான்! (வீடு தந்து). அவன் மென்