பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 திருவாசகம் சில சிந்தனைகள்-5 திருவாசகம், திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் தொடங்கிப் போவோம் காலம் வந்தது காண்’ என்பது வரை அனுபவப் பிழிவாய் வளர்ந்து செல்கிறது. பாடல்களை இன்றையப் பதிப்பிலுள்ள முறையில் வைக்காமல் மேலே அமைத்துள்ள 13 தொகுப்புகளில் முன்னும் பின்னுமாக வைத்துப் பார்த்தால் பெருந்துறையில் புதுவடிவெடுத்த அடிகளார் எப்படி முழுவளர்ச்சியடைந்து உலகத்தை உய்விப்பதற்குப் பாடியிருக்கிறார் என்பதை அறிய முடியும். இது கருதியே இதனைச் செய்துள்ளேன். இது முடிந்த முடிபென்று நான் கருதவுமில்லை; கூறவும் இல்லை. அறிஞர்கள் மேலும் இதுபற்றிச் சிந்திக்க இத்தொகுப்பு முறை உதவினால் அதுவே நான் விரும்பியதாகும். முரண்பாடுகள் அவ்வப்பொழுது பாடல்களைப் படிக்கச்சொல்லி, அந்த நேரத்தில் மனத்திடைத் தோன்றிய எண்ணங்களுக்கு வடிவு கொடுத்ததே இந்நூல் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளேன். இப்படிச் செய்வதில் பல சிக்கல்கள் வரும் என்பதை நான் உணராமல் இல்லை. தொடக்கத்தில் ஒரு பாடலையோ பதிகத்தையோ எடுத்துக்கொண்டு எழுதும்போது ஒரு குறிப்பிட்ட கருத்து வலுவுடன் எழுதப்பெற்றிருக்கும். ஆன்ால் பல பாடல்கள் கழிந்தபிறகு ஏதோ ஒரு பாடலுக்கு எழுதும்போது முன்னர்க் கூறிய கருத்திற்கு முற்றிலும் முரண்பட்டோ ஒரளவு மாறியோ சில கருத்துக்கள் எழுதப்பெற்றிருக்கும். இவ்வாறு எழுதும்போது பல முரண்பாடுகள் இடம் பெற்றிருத்தல் கூடும். அந்த அந்தப் பாட்டைப்பற்றி எழுதும்போது சொல்லப்பட்ட கருத்து, மற்றொரு