பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 திருவாசகம் சில சிந்தனைகள்-5 இதைப் புரிந்துகொண்டால் இங்கு முரண்பாடு என்று எதுவுமில்லை என்பது தெளிவாகும். இனி நம் சிந்தனைகளில் காணப்பெறும் முரண் பாடுகள் சிலவற்றைப்பற்றியும் இங்குக் 5ΙτούδΤουπιο. திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு, குருநாதர் தரிசனத்தை மீட்டும் எவ்வாறாவது பெற வேண்டும் என்று அவர் விரும்பினார். தில்லைக்குச் சென்றும் அது கிட்டவில்லை. இறுதியாக, திருக்கழுக்குன்றில் பல்வேறு காட்சிகளைக் கண்டபோது குருநாதர் காட்சியையும் அடியார் கூட்டக் காட்சியையும் கண்டார் என்றும் எழுதியுள்ளேன். ஆனால், அதே நேரத்தில் கண்ட பத்திற்கு விளக்கம் எழுதும்போது தில்லைக்கூத்தனைக் காணச்சென்றவருக்கு, முதலில் காட்சியளித்து மறைந்தவர் குருநாதர் என்றும் எழுதியுள்ளேன். இவை முன்னுக்குப் பின் முரண்போலத் தோன்றலாம். ஆழ்ந்து சிந்தித்தால் தில்லையிற் கண்ட குருநாதர் காட்சி, இவருடைய மனத்தில் தோன்றிய பேரவாவின் பிரதிபலிப்பே (mental projection)என்பது நன்கு விளங்கும். அகத் துறைபற்றிப் பேசும் தொல்காப்பிய இலக்கணம் நோக்குவ எல்லாம் அவையே போறல்' என்ற ஒரு துறையைக் களவியலில் ஒன்பதாம் சூத்திரமாக வகுத்துள்ளது. காதலிபற்றி முழுநேரமும், முழுமனத்தாலும் சிந்திக்கும் தலைவனுக்கு, எதைப் பார்த்தாலும் காதலியின் பல்வேறு உறுப்புக்கள் போலவே காட்சியளிக்கும். அடிகளார் அணிகொள் தில்லை கண்டேனே' என்று பாடும் பகுதியில் அவர் குருநாதரைக் கண்டார் என்று நான் எழுதியமை இந்த அடிப்படையிலேயே ஆகும். 'திருவாசகம்: சில சிந்தனைகள் முதற் பகுதியின் முன்னுரையிலேயே யான் மேற்கொண்ட வழியைப்பற்றி ஒரளவு கூறியுள்ளேன். பதவுரை, பொழிப்புரை கூறுவது என்னுடைய நோக்கமன்று. அதற்குப் பதிலாக ஒரு