பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை-3_453 பாடலைப் படித்து முடித்தவுடன் என்ன எண்ணத்தை அது தோற்றுவிக்கிறது என்பதையே அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளேன். இந்த அடிப்படையில் சென்றாலும் பாடலின் ஒவ்வோர் அடிக்கும் பொருள்கூற வேண்டிய சூழ்நிலை, பல பாடல்களைப் பொறுத்து ஏற்பட்டுள்ளது. கூறப்பட்ட பொருள் பாடலிலுள்ள சொற்களுக்கு நேர் சொற்பொருளாக அமையாமலும் இருக்கலாம். காரணம், அந்தச் சொற்கள் தோற்றுவிக்கும் எண்ணத்தையே அந்த அடியின்மேல் ஏற்றியுள்ளேன். அதனால் இவ்வாறு பொருள்கொள்வதற்குப் பாடலில் அமைந்துள்ள சொற்கள் இடம் தரா என்று தமிழறிஞர்கள் குறைகற வாய்ப்புண்டு. அப்பெருமக்கள் சொல்லுதற்குமுன் நானே அதனை உணர்ந்துள்ளேன். என்றாலும், திருவாசகம் முழுவதையும் மனத்துட்கொண்டு, குறிப்பிட்ட பதிகத்தையும் மனத்துட்கொண்டு பாடலிற் காணப்படும் தொடருக்கு வாலாயமாகப் பொருள்கறும் முறையிலல்லாமல் பொருள் கூறியுள்ளேன். இதில் கருத்து வேற்றுமைக்கு நிரம்ப இடமுண்டு என்பதையும் நான் அறிவேன். திருவாசகத்தில் ஈடுபாடுகொண்ட அன்பர்கள் யான் கூறியவற்றை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் மேலும் சிந்திப்பதற்கு இது உதவுமேயானால் அதுவே என் பணிக்குக் கிடைத்த பேறு என்று எண்ணி மகிழ்வேன். முற்றும்