பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருவாசகம் சில சிந்தனைகள்-5 மலர்க் கழல்களைக் காட்டியவுடன் அவருடைய பழைய ஆட்டம் ஒழிந்தது. இதனையே என்தன் வெந்தொழில் வீட்டிட' என்கிறார் அடிகளார். அடுத்தபடியாக ‘என் அகம் புகுந்தான். புகுந்தவுடன் நான் ஆடத் தொடங்கிவிட்டேன். என் பழைய ஆட்டத்திலும் இப்புதிய ஆட்டம் முற்றிலும் மாறுபட்டிருந்தது. மாடு, மனை, மகளிர் என்பவற்றில் ஆழ்ந்து ஆடும்போது நான் என்ற ஒன்று தலைதுாக்கி நின்றது. இந்த நான், உலகம் முழுவதையும், எனது என்ற போர்வைக்குள் புகுத்திவிட்டது. 'இப்பொழுது, மென்மலர்க்கழல் காட்டி ஆடுவித்தபோது என்ன புதுமை! என்ன வேறுபாடு! சில விநாடிகளுக்குப் பதிலாக, நீங்காத நிலையான பேரின்பம் நிலைத்துவிட்டது. முன்னர்த் தலைதுாக்கிநின்ற நான் இப்பொழுது எங்கே போயிற்றென்றே தெரியவில்லை. அது போய்விட்ட காரணத்தால் இந்த அற்புதத்தை அவன் எப்படி நிகழ்த்தினான், எவ்வாறு உள்ளே புகுந்தான், எவ்வாறு என்னை மறந்து ஆடுமாறு செய்தான் என்பதை நான் அறியமுடியவில்லை என்ற கருத்தையே ஆண்டது ஒர் அற்புதம் அறியேனே என்கிறார். - 374, வணங்கும் இப்பிறப்பு இறப்பு இவை நினையாது மங்கையர் தம்மொடும் பிணைந்து வாய் இதழ்ப் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய்த் திரிவேனைக் குணங்களும் குறிகளும் இலாக் குணக் கடல் கோமளத்தொடும் கூடி . அணைந்து வந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே k வணங்குதல் என்பது, நேராக நிற்கும் தம் உடலை வளைத்துப் பணிதலைக் குறிக்கும். மேலும்மேலும் முன்னேறிச் செல்லவேண்டிய ஆன்மாவை வினை வளைத்துப் பிடித்து 6