பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து 39 ஒர் உடம்பினுள் புகுமாறு செய்தலின் 'வணங்கும் இப்பிறப்பு என்றார். - இப்பாடலின் மூன்றாம் நான்காம் அடிகள் தமிழர் கண்ட பேருண்மையை விளக்கும் முறையில் அமைந்துள்ளன. 'குணங்களும் குறிகளும் இல்லாத ஒன்றைக் குணக் கடல்' என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? குறியில்லாத ஒரு பொருள் கோமளத்தொடும் (உமையம்மையுடன்) வந்தது என்பதும் எவ்வாறு பொருந்தும்? கடவுட்பொருளை அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகளில் வைத்துப் பேசினர் இத்தமிழர். ஏதாவது ஒரு குறியீட்டின்மூலம் அதனைச் சுட்டத் தொடங்கினால் அந்தக் குறியீட்டுக்கு உள்ளாகவே அது அடங்கிவிடும் என்று மனித மனம் நினைக்கலாம் அல்லவா? இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவே குறிகளின் உள்ளும் இருக்கிறான்; அவற்றிற்கு அப்பாலும் இருக்கிறான் என்ற இரண்டு மாறுபட்ட பொருள்களையும் உள்ளடக்கித், தொல்காப்பியர் காலத்திற்குமுன்பே 'கடவுள்' என்ற பெயரை அப்பொருட்குச் சூட்டினர். உள்ளே உள்ளது. அதே பொருள் கடந்தும் நிற்பது என்ற பொருளில் கடவுள் என்ற பெயர் அமைந்தது. இக்கருத்தையே மூன்றாம் அடியில் அடிகளார் குறிப்பிடுகின்றார் என்க. - 575. இப்பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஒதித் தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி இணை காட்டி அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே 7