பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து 41 அடிகளாருக்கு இரண்டு நூற்றாண்டுகள் முற்பட்ட நாவரசர் பெருமான் தம் காலத்திலும் இத்தகையவர்கள் உண்டு என்பதைப் நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே’ 'புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியே’ (திருமுறை:5,90-9) என்ற பாடலால் அறிவிக்கின்றார். இயல்பொடு அஞ்செழுத்து ஒதுதல் என்பது எடுத்த எடுப்பிலேயே யாருக்கும் வந்துவிடுவதில்லை. ஆனால், ஒரு சில காலப் பயிற்சிக்குப் பின்னர் இந்த ஐந்தெழுத்து ஒதுதல் மூச்சு விடுதல் இயல்பாக நடைபெறுதல் வேண்டும். வஞ்சகம் இல்லாமல், தன்னையும் பிறரையும் ஏமாற்றும் சூழ்நிலை இல்லாமல், உள்ளன்போடு உண்மையாக ஐந்தெழுத்தை ஒதல் வேண்டும் என்ற உறுதிப்பாடு மனத்திடை இருக்குமேயானால், ஒருசில காலப் பயிற்சியின் பின்னர் இயல்பொடு ஒதும் நிலை, தானே ஏற்பட்டுவிடும். இயல்பொடு என்று கூறியமையின் மனம் ஐந்தெழுத்து ஒதும் செயலில் ஒருங்கிணைந்து தொழிற்படுகிறது என்பது பெற்றாம். இயல்பொடு ஐந்தெழுத்து ஒதுதல் என்பதில் மனம், மொழி என்ற இரண்டிற்கும் உரிய பணியைத் தந்தாயிற்று. எஞ்சியிருப்பது மெய்(உடம்பு) ஒன்றுதான். இயல்பொடு ஐந்தெழுத்து ஒதத் தொடங்கும் மனத்தோடும், ஒதுகின்ற வாயோடும், இந்த உடல் ஒருங்கிணைந்து தொழிற்பட வேண்டுமேயானால், இந்த ஒதுதலோடு தொடர்புடைய ஒரு பணியை உடம்பிற்குத் தரவேண்டும். அதனையே முற்பகுதியில் இப்பிறப்பினில் இணைமலர் கொய்து தப்பிலாது பொன் கழல்களுக்கு இட வேண்டும் என்கிறார். மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயற்பட்டாலொழிய வரப்போகும் ஆபத்திலிருந்து ஒருவர் தம்மைக் காத்துக்கொள்ள முடியாது. இந்த மூன்றில்